இந்த சுமை மக்களைத்தான் பாதிக்கும்..முழு உரடங்கிற்கு வாய்ப்பிருக்காது என நம்புவோம் – முக ஸ்டாலின்

தமிழகத்தில் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பு இருக்காது என்ற நம்பிக்கையுடன் செயல்படுவோம் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கொரோனா 2.0 பாதுகாப்பாக இருப்போம் என்றும் பக்கபலமாக நிற்போம் எனவும் கூறி, முக ஸ்டாலின் திமுகவினருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், கொரோனா இரண்டாவது அலை உலகத்தை அச்சுறுத்தி வருகிறது. அதிலும், இந்தியாவில் அதன் தாக்கம் வேகமாகவும், கோரமாகவும் இருக்கிறது.

ஒரு நாளில் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 3 லட்சத்தைக் கடந்து நிற்கிறது. தமிழ்நாட்டில் நாளொன்றுக்குப் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்திற்கு மேல் உள்ளது. நோய்த் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை கவலையையும், வேதனையையும் அளிக்கிறது என கூறியுள்ளார்.

மக்களின் உயிர் காக்கும் பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு அயராது பாடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களின் சேவை போற்றுதலுக்குரியது. அவர்களையும் மக்களையும் பாதுகாக்க வேண்டிய கடமை மத்திய – மாநில அரசுகளுக்கு இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

போதிய அளவில் ஆக்ஸிஜன் கிடைக்காமல் மகாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக் முதல் தமிழ்நாட்டின் வேலூர் வரை பலர் பரிதாபமாக உயிரிழந்திருக்கும் செய்தி நெஞ்சைப் பிளக்கிறது. கொரோனாவிலிருந்து மக்களைக் காப்பதற்கான தடுப்பூசிகள் மே 1 முதல் 18 வயது மேற்பட்டோர்அனைவருக்கும் போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதை காண முடிகிறது.

அனைவருக்கும் தடுப்பூசி என்றும் மருந்துகளை மாநில அரசுகளே நேரடியாகக் வாங்கி கொள்ளலாம் எனவும் மத்திய அரசு அறிவித்த நிலையில், தடுப்பூசி மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் அவற்றின் விலையைக் கடுமையாக உயர்த்தியிருப்பது மாநிலங்கள் மீது ஏற்றப்பட்டுள்ள பெரும் சுமையாகும், இந்த சுமை மக்களைத்தான் பாதிக்கும் என குற்றசாட்டியுள்ளார்.

கொரோனா 2.0 எனப்படும் இரண்டாவது அலையின் உயிர்ப்பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதில் நம் கழகத்தைச் சேர்ந்தவர்களும் மரணமடைகிற வேதனைச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. தன் உயிர் போலப் பிற உயிர்களை நேசிப்பதும் – பிற உயிர்களைப் போலத் தன்னுயிர் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிப்பதும் இந்தப் பேரிடர்ச் சூழலில் இன்றியமையாததாகும்.

அதனை உணர்ந்து கழகத்தினர் கவனத்துடன் கடமையாற்ற வேண்டும் என கூறி, மே 2-க்குப் பிறகும் முழு ஊரடங்குக்கு வாய்ப்பிருக்காது என்ற நம்பிக்கையுடன் செயல்படுவோம். அதுவரை, கொரோனா பரவல் குறையும் வகையில் உரிய பாதுகாப்பு முறைகளைக் கையாள்வோம். நமக்கு நாமே பாதுகாப்பாக இருப்போம். நம்மைப் போன்றவர்களுக்கு பக்க பலமாக நிற்போம் என தெரிவித்துள்ளார்.

மேலும், தி.மு.கழக நிர்வாகிகளும் – வேட்பாளர்களும் – செயல்வீரர்கள் உள்ளிட்ட அனைத்து உடன்பிறப்புகளும் மக்களுக்கு உதவிடும் பணியில் களமிறங்கிச் செயலாற்றி வருவதைக் கவனித்து வருகிறேன். மக்களுக்குத் தொண்டாற்றிடும் கழகத்தினர் அனைவரும் தங்கள் நலனிலும் அக்கறையுடன் இருந்து, பாதுகாத்துக் கொள்வது முதன்மையான கடமையாகும் என கடித்தது கூறியுள்ளார்.

பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Recent Posts

இனி உள்நாட்டு கிரிக்கெட் வீரரும் ரூ.1 கோடி சம்பாதிக்கலாம்!! அதிரடி திட்டம் போடும் பிசிசிஐ !

BCCI : உள்நாட்டில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு செய்ய பற்றி பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக க்ரிக்பஸ் வலைத்தளம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போதைய பிசிசிஐ…

7 mins ago

ஹர்திக் இல்ல ..சந்தீப் உள்ள ..? இது புதுசா இருக்கே ..டி20 அணியை அறிவித்த சேவாக் !!

Sehwag : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான அவருக்கு புடித்த இந்திய அணியை விரேந்திர சேவாக் அறிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள்…

1 hour ago

தொழிலதிபரிடம் 5.2 கோடி மோசடி ..! திருட்டு கும்பலுக்கு வலை வீச்சு ..!

Invesment Scam : பெங்களூரில் தொழிலதிபர் ஒருவர் அதிநவீன ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் ரூ.5.2 கோடி இழந்துள்ளார். ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் பல மோசடிகள்…

2 hours ago

ஒரு தடவை பட்டது போதாதா? பிளாப் இயக்குனருடன் மீண்டும் இணையும் விஜய் சேதுபதி!

Vijay Sethupathi : டிஎஸ்பி எனும் பிளாப் படத்தை கொடுத்த இயக்குனர் பொன் ராமுடன் விஜய் சேதுபதி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்…

2 hours ago

ப்ரோமோவே மிரட்டலா இருக்கு! புஷ்பா 2 முதல் பாடல் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Pushpa 2 : புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் பெரிய வெற்றியை…

3 hours ago

6,244 பணியிடங்கள்… ஜூன் 9இல் குரூப் 4 தேர்வு.! TNPSCயின் முக்கிய தேர்வு தேதிகள் இதோ….

TNPSC Group 4 : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூன் 9ஆம் தேதியன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தமிழகத்தில் லட்சக்கணக்கோர் எழுதும் மிக முக்கிய…

3 hours ago