ஆண்களின் பாலியல் வாழ்வுக்கு உதவும் வெங்காய சாற்றின் ரகசியம் அறியலாம் வாருங்கள்…!

சமையலுக்கு மிக முக்கியமான ஆதாரமாக விளங்கக்கூடிய வெங்காய சாறு சுவைக்கு மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திலும் அதிக அளவு பயன்படுகிறது. அதில் அதிக அளவு மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் மற்றும் முக்கியமான தாதுக்கள் அடங்கி உள்ளது. எனவே இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதோடு, உடல் வலிமை பெறுவதற்கும் உதவுகிறது. இந்த வெங்காயச்சாறு மூலமாக ஆண்களுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. இது ஆண்களுக்கு எந்த விதத்தில் அதிகம் பயன்படுகிறது என்பதைக் குறித்து இன்று நாம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

ஆண்களுக்கு

இந்த வெங்காய சாற்றை அதிகம் எடுத்து கொள்வதன் மூலமாக ஆண்கள் உடல் வலிமை அதிகரிக்க உதவுகிறது. மேலும் ஆண்களின் பாலியல் திறனை அதிகரிப்பதற்கு இந்த வெங்காய சாறு பெரிதும் பயன்படுகிறது. வெங்காயத்தை ஆண்கள் அதிக அளவில் பயன்படுத்தும் போது ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் என்னும் ஹார்மோன் அளவு மேம்படுமாம். இதன் மூலமாக ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் சமநிலை படுத்தப்பட்டு, விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு உதவும்.

sperm count

இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள நாட்டின் புகழ்பெற்ற ஆயுர்வேத நிபுணரும் எழுத்தாளருமான டாக்டர் அப்ரார் முல்தானி அவர்கள் கூறுகையில், வெங்காய சாறை அதிகம் உட்கொள்ளக் கூடிய ஆண்களின் பிறப்புறுப்பு பலப்படுத்தப்படுவதாகவும், இது லிபிடோவை அதிகரிக்கச் செய்வதாகவும் கூறியுள்ளார். மேலும் இது ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனை அதிகரிக்க செய்து பாலியல் சகிப்புத் தன்மையை மேம்படுத்த உதவும் எனவும் தெரிவித்துள்ளார்.

வெங்காயத்தில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் காணப்படுவதால் இது விந்தணுக்களின் எண்ணிக்கையை இயற்கையான முறையில் அதிகரிப்பதற்கு உதவுகிறது. மேலும், பாலியல் தொடர்பான பிரச்சினை உள்ள ஆண்கள் வெங்காய சாற்றை உட்கொள்ளும் பொழுது, நிச்சயம் நல்ல தீர்வு கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது. திருமணமான ஆண்கள் வெங்காய சாற்றை அதிகளவில் எடுத்துக் கொள்ளும் பொழுது இது பாலியல் வாழ்க்கையை ஆரோக்கியமாக கொண்டு செல்வதற்கு உதவுமாம். உறங்க செல்வதற்கு முன் திருமணமாகிய ஆண்கள் இரவு நேரத்தில் ஒரு ஸ்பூன் வெங்காய சாறு குடிப்பது மிகவும் நல்லது எனவும் கூறப்படுகிறது.

பிற நன்மைகள்

இந்த வெங்காய சாறு ஆண்களுக்கு மட்டும் நன்மை தரும் என்று கிடையாது. இதில் அதிக அளவில் வைட்டமின் சி காணப்படுவதால் இது கர்ப்பிணிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதோடு, ரத்தச் சோகை நோயாளிகளும் இந்த வெங்காயச்சாறு நல்ல பலனளிக்கிறது. மேலும் உடலின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து, கண் தெளிவடைய உதவுகிறது. மேலும், கண் பார்வை மங்கியவர்களும் இந்த வெங்காய சாற்றை எடுத்து கொள்ளும் போது கண்கள் பிரகாசமடையும் எனவும் கூறப்படுகிறது.

author avatar
Rebekal