நம் தனிப்பட்ட எண்ணங்களை கட்சியின் கருத்தாக யாரும் தெரிவிக்க வேண்டாம் – ஏஎன்எஸ் பிரசாத்

கொங்கு நாடு என்பது பாஜகவின் கருத்து இல்லை என்று தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏஎன்எஸ் பிரசாத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டை இரண்டாகப் பிரித்து கொங்கு நாடு என்ற யூனியன் பிரதேசத்தை உருவாக்க மத்திய பாஜக அரசு முயற்சிப்பதாக செய்தி வெளியானதைத் தொடர்ந்து, இவ்விவகாரம் விவாதப்பொருளாக மாறியுள்ளது. இதனைத்தொடர்ந்து, கொங்கு நாடு குறித்த சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கொங்கு நாடு என்பது பாஜகவின் கருத்து இல்லை என்று தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏஎன்எஸ் பிரசாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், கொங்குநாடு என்பதும், தமிழகத்தை இரண்டாக பிரிப்பது என்பதும் பாஜகவின் நிலைப்பாடு அல்ல, வளமான தமிழகம், வலிமையான பாரதம் என்பதே பாஜகவின் லட்சியம் என கூறியுள்ளார்.

மேலும், மாநில தலைவரோ, பொதுச்செயலாளரோ கொங்குநாடு குறித்து அதிகாரப்பூர்வ கருத்து வெளியிடவில்லை என்றும் நம் தனிப்பட்ட எண்ணங்களை கட்சியின் கருத்தாக யாரும் தெரிவிக்கப்பவேண்டாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்