ஜவான் மேடையில் லியோ: கொளுத்திப்போட்ட பிரியாமணி! பேசவிடாமல் செய்த அந்த சம்பவம்!

By

JawanPreRelease event - Priyamani

நடிகர் ஷாருக்கான் நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள “ஜவான்” திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 7-ஆன் தேதி, தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், ஜவான் படம் வெளியாக இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஜவான் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் ஷாருக்கான், அட்லீ, அனிருத், விஜய்சேதுபதி என அனைவரும் கலந்துகொண்டார்கள்.

அப்போது, ஜவானில் முக்கிய வேடத்தில் நடிக்கும் ப்ரியாமணி மேடையில் பேசுகையில், இசைமைப்பாளர் அனிருத் பற்றி புகழ்ந்து கொண்டிருந்தார். இசையமைப்பாளர் அனிருத் தற்போது பல பெரிய திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். சமீபத்தில் வெளியான ஜெயிலர் மூவி, மேலும் இவருடைய இசையில் ‘ஜவான்’ திரைப்படத்தை தொடர்ந்து லியோ திரைப்படம் வெளியாகிறது என்று சொன்னதும், ரசிகர்களின் ஆரவாரத்தால் அரங்கமே  அலறியது.

உடனே, நடிகை ப்ரியாமணி சரி… என்ன கொஞ்சம் பேச விடுங்க என்று கூறினாலும் கூட, ரசிகர்களின் கூப்பாடு நின்றபாடில்லை. கூச்சல் நிற்காமல் கேட்டுக்கொண்டிருக்கிறது, சும்மா இருந்த சங்க ஊதி கெடுத்த மாதிரி… சென்னையில் நடக்கும் ஜவான் படத்தின் ஈவண்டில் லியோ பற்றி பேசினால் பிறகு என்ன ஆகும். இதோ நீங்களே பாருங்க../

ஜவான் படத்தின் பாடல்கள் வெளியாகி ஹிந்தியிலும், தமிழும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அந்த அளவிற்கு ஹிட் ஆகா கூடிய வகையில், படத்திற்காக இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார்.