பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்களுக்கு கற்றல் குறைபாடு – சௌமியா சாமிநாதன்..!

பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்களுக்கு கற்றல் குறைபாடு – சௌமியா சாமிநாதன்..!

அனைவரும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தும் வரை கட்டுப்பாடுகளை கடைபிடிக்கவும் என சௌமியா சாமிநாதன் தெரிவித்தார்.

சென்னை தரமணியில் செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதா அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சாமிநாதன், கொரோனாவை பற்றி நாம் இன்னும் அதிகம் புரிந்துக்கொள்ள வேண்டும். 20 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்களுக்கு கற்றல் குறைபாடு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் டிஜிட்டல் connectivity முன்னேறி இருந்தாலும் நெட்வொர்க் connectivity குறைபாடுகள் நீடிக்கின்றன. முகக்கவசம், சமூக இடைவெளியை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். அனைவரும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தும் வரை கட்டுப்பாடுகளை கடைபிடிக்கவும். குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவு.

 

author avatar
murugan
Join our channel google news Youtube