30 C
Chennai
Thursday, October 21, 2021

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னிலை நிலவரம்..!

இரவு 10.30 மணி நிலவரப்படி 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் முன்னிலை நிலவரம்

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக அக்டோபர் 6, 9ஆம் தேதிகளில் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

அதன்படி தற்போது வரை தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கைப்படி,  மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளில் 11 இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளில் 39 இடங்களில் அதிமுகவும், பாஜக ஒரு இடத்திலும், கம்யூனிஸ்ட் ஓரிடத்திலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  4 இடத்திலும், தேமுதிக ஒரு இடத்திலும், திமுக 254 இடங்களிலும், இந்திய தேசிய காங்கிரஸ் 10 இடங்களிலும், மற்றவை 40 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

 

spot_imgspot_img

Hot Topics

Read More