வெள்ளி திரையை பகுத்தறிவு சிந்தனைக்கு லாவகமாக பயன்படுத்திய முன்னுதாரண கலைஞர் விவேக் – இரா.முத்தரசன்!

வெள்ளி திரையை பகுத்தறிவு சிந்தனைக்கு லாவகமாக பயன்படுத்திய முன்னுதாரண கலைஞர் விவேக் – இரா.முத்தரசன்!

நடிகர் விவேக் பகுத்தறிவு சிந்தனைக்கு வெள்ளித்திரையில் லாவகமாக பயன்படுத்திய முன்னுதாரணம் கலைஞர் என நடிகர் விவேக் அவர்களின் மறைவிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் அவர்கள் புகழாரம் கூறி இரங்கல் தெரிவித்துள்ளார்.

நெஞ்சுவலி காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நடிகர் விவேக் இன்று அதிகாலை உயிரிழந்த நிலையில் இவரது மறைவிற்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், வெள்ளித்திரையில் சின்ன கலைவாணர் என்று அழைக்கப்படக்கூடிய நடிகர் விவேக் எனும் விவேகானந்தன் இன்று அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். 34 ஆண்டுகளுக்கு முன்பு இயக்குநர் கே பாலச்சந்தர் அவர்களால் வெள்ளித்திரைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட அற்புதமான நகைச்சுவை கலைஞர் தான் விவேக் எனவும், மூடநம்பிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிவியல் மற்றும் பகுத்தறிவு சிந்தனைக்காக லாவகமாக வெள்ளித்திரை பயன்படுத்திய முன்னுதாரண கலைஞர் விவேக் எனவும் புகழாரம் சூட்டியுள்ளார்.

மேலும் திரை உலகின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்த விவேக் மத்திய மாநில அரசுகளின் கலை இலக்கிய விருதுகளை பெற்ற பெருமைக்குரியவர் எனவும், இவர் சத்யபாமா பல்கலைக்கழகம் வழங்கி கவுரவ முனைவர் பட்டமும், நாட்டின் மதிப்பு மிக்க பத்மஸ்ரீ விருதும் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது என தெரிவித்துள்ளார். மேலும் தலைவர் அப்துல் கலாமின் கருத்துக்களை குழந்தைகளுடன் தொடர்ந்து எடுத்துச் சென்ற விவேக் அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு எனவும் இரங்கல் தெரிவித்துள்ள அவர், விவேக்கின் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதுடன், அவரை பிரிந்து வாடும் அவரது மனைவி அருள்செல்வி மற்றும் குடும்பத்தாருக்கும், திரையுலகினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் அவரது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal
Join our channel google news Youtube