தலைவி திரைப்படம் : ஜெ. தீபாவின் மனு தள்ளுபடி..!!

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட தலைவி, ஜெயா(இந்தி) திரைப்படங்களுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்குனர் ஏ. எல். விஜய் படமாக இயக்க உள்ளார். தலைவி என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரணவத் மற்றும் எம்ஜிஆராக அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தை போல் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் குயின் என்ற வெப்பத் தொடரையும் இயக்கியிருந்தார். இந்த நிலையில் ஜெயலலிதாவின் வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள ஜெ.தீபா ஜெயலலிதாவின் வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட தலைவி படம், குயின் இணைய தொடரில் தங்கள் குடும்பத்தினரை தவறாக சித்தரித்துள்ளதாகவும் தடைக் கோரி வழக்கு தொடர்திருந்தார். மேலும் தீபா தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட தலைவி, குயின், ஜெயா(இந்தி) திரைப்படங்கள் வெளியிட தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் தலைவி திரைப்படம் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மீண்டும் திரையரங்குகளில் 50 % பார்வையாளர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் தலைவி படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.