சர்வதேச அளவில் தரமான சண்டைக் காட்சி…”இந்தியன் 2″ திரைப்படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்.!

கடந்த 1996 ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் வெளியான திரைப்படம் “இந்தியன்”. இது உண்மையில் இன்று “தி பான் இந்தியா” என்று அழைக்கப்படுவதற்கு தகுதியான படம் என்றே கூறலாம். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து  27 வருடங்கள் கழித்து, “இந்தியன் 2” என்ற தலைப்பிலான அதன் தொடர்ச்சியாக இரண்டாவது பாகம் உருவாகி வருகிறது.

Indian2 update
Indian2 update Image Source Google

 கடந்த 3 ஆண்டுகளாக இப்படத்தின் பல இடங்களில் படமாக்கப்பட்டு வருகிறது. இன்னும் 35 நாட்களில் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், இந்தியன் 2 படம் குறித்து லேட்டஸ்ட்டாக சூப்பர் தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

Indian2
Indian2 Image Source Google

அது என்னவென்றால், இந்தியன்2 படத்தில் ரயிலில் ஒரு சர்வதேச தரமான சண்டைக் காட்சி ஒன்று காட்டப்படவுள்ளதாம். இதனால் படக்குழு அடுத்த வாரம் தென்னாப்பிரிக்காவுக்குச் செல்லவுள்ளனர். அங்கு ஒரு ரயிலில் ஒரு பெரிய ஆக்ஷன் காட்சியை படமாக்க திட்டமிட்டுள்ளனர், இது சர்வதேச அதிரடி நடன இயக்குனர்கள் குழுவால் எடுக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Indian2 kamal
Indian2 kamal Image Source Google

14 நாட்கள் ஷெட்யூல் அங்கு திட்டமிடப்பட்டு, முழு படப்பிடிப்பும் மே மாதத்திற்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தை இந்த ஆண்டு தீபாவளி  வெளியீட்டிற்கு தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். படத்தை லைக்கா நிறுவனமும், ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment