• இன்று  இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5-வது ஒருநாள் போட்டி   நடைபெறுகிறது. 
  • இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன்  ஆரோன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.  

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.இதில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணியும் கடைசி இரண்டு போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் வெற்றிபெற்றது.

 

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

கடைசி மற்றும் 5-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.இந்த போட்டி  டெல்லியில் நடைபெறுகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன்  ஆரோன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய லெவன்: ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி (கேப்டன்),பண்ட்,  கேதர் ஜாதவ், விஜய் சங்கர், ரவீந்திர ஜடேஜா, முகமது ‌ஷமி  ,குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா,புவனேஷ்வர் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஆஸ்திரேலிய லெவன்: உஸ்மான் கவாஜா, ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், அலெக்ஸ் காரி, ,டர்னர், கம்மின்ஸ், நாதன் லயன், ஆடம் ஜம்பா,ரிச்சட்ஸன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரை கைப்பற்றும்.