உத்தரகாண்ட்டில் நிலச்சரிவு : 7 பேர் உயிரிழப்பு ….!

உத்தரகாண்ட்டில் நிலச்சரிவு : 7 பேர் உயிரிழப்பு ….!

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜீம்மா கிராமத்தை சுற்றியுள்ள ஜம்ரி, தார்கோட் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து  வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்பொழுதும் கனமழை காரணமாக ஜீம்மா கிராமத்தை சுற்றியுள்ள பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் உயிரிழந்தவர்களில் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து தெரிவித்துள்ள உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி அவர்கள், இந்த நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழந்ததாகவும், கிராமத்தில் கிடந்த குப்பைகளில் சிக்கி 5 பேர் மூழ்கி விட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இப்பகுதியில் மீட்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டுமென தான் உத்தரவிட்டுள்ளதாகவும், அப்பகுதி மக்களின் பாதுகாப்பிற்காக கடவுளிடம் பிரார்த்திக்கிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal
Join our channel google news Youtube