தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் வைரலாகி வரும் அக்ஷய் குமாரின் காஞ்சனா பட கெட்டப்!

தமிழில் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து வெற்றிபெற்ற திரைப்படம் காஞ்சனா 1 & 2 &3. பேய் படங்களை திகிலோடு காமெடி கலந்து கூறுவதால் சிறியவர்கள் முதல்  பெரியவர்கள் வரை அனைவரையும் காஞ்சனா பாகங்கள் கவர்ந்தன.
தற்போது காஞ்சனா படத்தை பாலிவுட்டில் இயக்கி வருகிறார் ராகவா லாரன்ஸ். இந்த படத்தில் 2.ஓ படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் முன்னணி நடிகர் அக்ஷய் குமார் ஹீரோவாக நடித்து வருகிறார். கீரா அத்வனி ஹீரோயினாக நடித்து வருகிறார்.
 
இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் வேளையில் தற்போது இப்படத்திலிருந்து ஒரு போட்டோ வெளியாகியுள்ளது. அதில் அக்ஷய் குமார் காஞ்சனா கெட்டப்பில் அசத்தலாக இருக்கிறார். இந்த புகைப்படம் பாலிவுட் ரசிகர்களை மட்டுமின்றி கோலிவுட் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து வருவதால் இணையத்தில் இந்த புகைப்படம் தீயாய் பரவி வருகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.