34 C
Chennai
Saturday, October 23, 2021

லக்கிம்பூர் வன்முறை : குடியரசு தலைவரை சந்தித்து மனு அளித்த ராகுல் காந்தி…!

லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக குடியரசு தலைவரை சந்தித்து மனு அளித்த ராகுல் காந்தி.

உத்திரபிரதேசம் லக்கிம்பூரில் விவசாயிகள் போராட்டத்தில், மத்திய அமைச்சர் மகனின் கார் மோதி 2 விவசாயிகள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையால் 4 விவசாயிகள் உட்பட 9 பேர் பலியாகியுள்ளனர் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி அவர்கள்   சென்ற போது போலீசார், பிரியங்கா காந்தியை அந்த கிராமத்திற்குள் அனுமதிக்காமல் கிராம எல்லையிலேயே போலீசார் கைது செய்த நிலையில், அவர் மீது வழக்குப்பதிவும் செய்தனர்.

அதன்பின் ராகுல் காந்தி செல்வதற்கும் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், சில மணி நேரங்களுக்கு பின், ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்திக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், இன்று லக்கிம்பூர் வன்முறையில் நியாயமான விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தியும், மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கக் கோரியும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள் குடியரசுத் தலைவரை சந்தித்து மனு அளித்துள்ளார்.

இந்த சந்திப்பின்போது காங்கிரஸின் மூத்த தலைவர்களான பிரியங்கா காந்தி மல்லிகார்ஜுன கார்கே, குலாம் நபி ஆசாத் ஆகியோர் உடனிருந்தனர்.

spot_imgspot_img

Hot Topics

Read More