லக்கிம்பூரில் கலவரம் : உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணை..!

லக்கிம்பூர் கலவரம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி ரமணா தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தவுள்ளது.

அக்டோபர் 3 ஆம் தேதி காலை உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் மாநில துணை முதல்வர், மத்திய இணை அமைச்சர் ஆகியோர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருந்தனர். அப்போது மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகள் பேரணியாக சென்று கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் அமைச்சரின் மகன் சென்ற வாகனம் விவசாயிகள் மீது மோதியதாக கூறப்டுகிறது.

பின்னர், ஏற்பட்ட வன்முறையில் விவசாயிகள் 4 பேர், பொதுமக்கள் 4 பேர் , பத்திரிகையாளர் ஒருவர் என 9 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. லக்கிம்பூருக்கு நேற்று இரவு சென்ற  பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்திற்கு ஆறுதலை தெரிவித்தனர். இந்நிலையில், அதன்படி தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் ஹியா ஹோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன், 16ஆவது வழக்காக இன்றைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது

author avatar
murugan