பெண்களே…! இனிமே முட்டை ஓடை தூக்கி எறியாதீங்க…!

நாம் வேண்டாமென்று தூக்கி எரியும் முட்டை ஓட்டை எவற்றிற்க்கெல்லாம் பயன்படுத்தலாம்.

நமது வீடுகளில் அடிக்கடி முட்டையை பயன்படுத்தி உணவுகளை தயாரிப்பது உண்டு. ஆனால், அந்த முட்டையை பயன்படுத்திவிட்டு, அதன் ஓட்டை நாம் தேவையில்லை என்று கருதி தூக்கி எறிவதுண்டு. ஆனால், நாம் வேண்டாமென்று தூக்கி எறியக்கூடிய அந்த முட்டை ஓடு நமக்கு பல வகைகளில் பயன்படுகிறது. தற்போது இந்த பதிவில் முட்டை ஓட்டை எவற்றிற்க்கெல்லாம் பயன்படுத்தலாம் என்பது பற்றி பார்ப்போம்.

பல்லி தொல்லை

நம்மில் அதிகமானோரின் வீடுகளில் பல்லிகள் தொந்தரவு காணப்படுவதுண்டு. இந்த தொந்தரவு உள்ளவர்கள், முட்டை ஓட்டை எடுத்து அதனை ஒரு நாள் வெளியில் காய வைத்து, அதனை பல்லிகள் அதிகம் உள்ள இடத்தில் வைத்தால் பல்லிகளின் நடமாட்டம் குறையும்.

தோட்டம்

வெட்டேட்டில் தோட்டம் வைத்திருப்பவர்களுக்கு முட்டை ஒரு சிறந்த உரமாகும். எனவே நாம் முட்டை ஓட்டை குப்பையில் போடுவதற்கு பதிலாக, செடிகளுக்குள் போட்டால் அது உரமாக  பயன்படும்.

பாத்திரம்

நமது வீடுகளில் உள்ள தவாவின் பின்புறத்தில் கருப்பு கரை படிந்திருக்கும். இதை போக்க, முட்டை ஓட்டை மிக்சியில் போட்டு அரைத்து, அதனை நீருடன் கலந்து,கருப்பு கரை உள்ள இடத்தை தேய்த்து விட்டு 10 னிடம் களைத்து, பாத்திரம் துலக்கும் சோப்பால் கழுவினால் கரை போய்விடும்.

மிக்சி ஜார்

மிக்சி ஜாரில் உள்ள பிளேடு நாளடைவில் தேய்ந்து விடும். இதனை கூர்மையாக்க சிறிதளவு முட்டை ஓட்டை மிக்சி ஜாரில் போட்டு அரைத்தால் பிளேடு கூர்மையாகிவிடும்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.