பெண்களே….! இனிமேல் கட்டிபட்டுப்போன காப்பித்தூளை தூக்கி எறியாதீங்க…!

நமது வீடுகளில் தினமும் காலையிலும், மாலையிலும் தேநீர் குடிப்பது வழக்கம். இதில் சிலைக்கு டீ பிடிக்கும். சிலருக்கு காபி பிடிக்கும். எனவே டீயை தயாரிப்பதற்கு தேயிலையை வாங்கி பாட்டிலில் சேகரித்து வைப்பது போல, காபி தயாரிக்க காப்பி தூளையும் வாங்கி சேகரித்து வைப்பதுண்டு. ஆனால், இந்த காப்பித்தூள் சில நாட்களில் கட்டிபட்டு போய்விடும். தற்போது இந்த பதிவில், கட்டிபட்ட காபித்தூளை தூக்கி எறியாமல், எப்படி உபயோகமுள்ளதாக மாற்றலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

காபி தூள் கட்டிப்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

காப்பி தூளை தினமும் காப்பி குடிக்கும் பழக்கம் இருப்பவர்கள் மட்டுமே பாட்டிலில் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். எப்போதாவது சில நேரங்களில் காப்பி குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் சிறிய காபித்தூள் பாக்கெட்டை வாங்கி பயன்படுத்தலாம். அவ்வாறு பயன்படுத்தும் காப்பித்தூள் பாக்கெட்டில் மீதம் காப்பித்தூள் இருந்தால் அதனை நன்றாக சுருட்டி, ரப்பர் பேண்ட் போட்டு வைத்தால் காப்பித்தூள் கட்டி ஆகாது.

எவர்சில்வர் அல்லது பிளாஸ்டிக்  டப்பாவில் கொட்டி வைத்தால் சீக்கிரமாகவே கட்டியாகி விடும். கண்ணாடி பாட்டிலில் கொட்டி வைத்தால் மட்டுமே நீண்ட நாட்களுக்கு கட்டி படாமல் வாசனை போகாமல் அப்படியே இருக்கும்.

நாம் வாங்கிய காப்பித்தூள் கட்டியாகி விட்டது என்பதற்காக இனிமேல் இருந்து அதனை தூக்கி எறியாதீர்கள். கட்டியான காப்பி தூளை எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டு வெந்நீரை எடுத்து கொஞ்சமாக இந்த கட்டிப்பிடித்த காப்பித்தூளில் ஊற்றி லேசாக ஸ்பூன் விட்டு கலந்து கொள்ள வேண்டும்.

காப்பித்தூள் கரைய தொடங்கியபின் இந்த காப்பி தூள் கலவையை நன்றாக ஆற வைத்து பின் ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி மூடி வைத்து இறுக்கமாக மூடி வைக்கலாம். இந்த காப்பி தூளை ஊற்றி காபி போட்டு் குடித்தால் மிகவும் சுவையாக இருக்கும். நாம் உபயோகப்படுத்தும் காபி தூளை விட இதன் சுவை சற்று அதிகமாக தான் இருக்கும். எனவே வீடுகளில் இனிமேல் பெண்கள் இந்த முறையை உபயோகப்படுத்தி பாருங்கள்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.