பெண்களே…! இனிமே வெங்காயத் தோலை தூக்கி போடாதீங்க….! உங்களுக்காக தான் இந்த பதிவு…!

நாம் தூக்கி எறியும் வெங்காயத் தோலில் பலவகையான பயன்கள் உள்ளது.

நமது அனைத்து வகையான சமையல்களிலும், வெங்காயம் என்பது ஒரு முக்கியமான இடத்தை பிடிக்கிறது. நாம் உண்ணக் கூடிய அனைத்து வகையான உணவுகளிலும் வெங்காயம் பயான்படுத்தப்படுகிறது. நாம் வெங்காயத்தை பயான்படுத்தும் போது, அதன் தோலை கழிவு என்று தூக்கி எரிந்து விடுகிறோம். ஆனால், அந்த வெங்காயத் தோலில் பலவகையான பயன்கள் உள்ளது. அவை என்னவென்று பார்ப்போம்.

வெங்காயத் தோலில் சல்பர் அதிகமாக உள்ளது. வெங்காயத் தோலை எடுத்து அதில், காய்ந்த தோல் மற்றும் ஈரமான தோலை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் ஈரமான தோலை வைத்து, தேநீர் பாத்திரம்,பால் பாத்திரம் போன்ற பாத்திரங்கள், கறையோடு காணப்பட்டால், அவற்றை இந்த தோலை வைத்து தேய்த்தால் போய்விடும்.

பின் ஒரு பாத்திரத்தில், தண்ணீர் வைத்து சூடானதும், அதில் வெங்காயத் தோலை போட்டு கொதிக்க விட வேண்டும். அந்த தண்ணீர் தேன் கலரில் மாறிய பின் இறக்கி தண்ணீரை மட்டும் வடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அந்த தண்ணீரை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து, தலையை அலசினால், முடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கி விடும்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.