பெண்களே…! இதை மட்டும் சாப்பிடாம இருக்காதீங்க.!

பொதுவாக நம் நமது உணவுகளில் நமது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக் கூடிய  விரும்பி சாப்பிடுவதுண்டு. வெள்ளை கொண்டை கடலையில் உள்ள பலன்கள் பற்றி பார்ப்போம். 

பொதுவாக நம் நமது உணவுகளில் நமது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக் கூடிய  விரும்பி சாப்பிடுவதுண்டு. அப்படிப்பட்ட உணவுகளில் வெள்ளை கொண்டை கடலையும் ஒன்று. இந்த கடலை சென்னா அல்லது வெள்ளை கொண்டை கடலை என்று தான் அழைக்கப்படுகிறது. தற்போது இந்த பதிவில் வெள்ளை கொண்டை கடலையில் உள்ள பலன்கள் பற்றி பார்ப்போம்.

நாம் நமது உணவுகளில் அதிகமாக கருப்பு கொண்டை கடலையை தான் சேர்ப்பதுண்டு. அதிகமாக வெள்ளை கொண்டை கடலை பயன்படுத்துவது இல்லை. ஆனால், சிலர் வெள்ளை கொண்டை கடலையை சுண்டல், குருமா செய்ய அதிகமாக பயன்படுத்துகின்றனர். பல ஹோட்டல்களில் சோளா பூரிக்கு, இணை உணவாக இந்த வெள்ளை கொண்டை கடலையை தன கொடுப்பார்கள்.

இந்த கொண்டை கடலையை சில மணி நேரம் ஊற வைத்து சாப்பிடுவதால், இதிலுள்ள புரத சத்துக்கள் அனைத்தும் நமது உடலில் கிடைகிறது. இந்த உடலில் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. இதில் அதிகமாக நார்சத்து  உள்ளதால், இது செரிமான பிரச்சனைகளை சீர் செய்யும்.

இதிலுள்ள புரோட்டின், எலும்பு, தசை, நரம்பு மற்றும் தோல் ஆகியவற்றின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. முக்கியமாக இது பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது ஆகும். ஒரு கப் கொண்டை கடலையை சாப்பிடுவதன் மூலம்,  அன்றாடம்  நமக்கு தேவைப்படும் 84.5% மெக்னீசியம் இதில் கிடைக்கிறது. இதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.

இது நமது உடலில் இரத்த சர்க்கரை அளவை நிலைப்படுத்தி, உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும். எனவே சர்க்கரை நோய் பிரச்னை உள்ளவர்கள் இதனை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

முக்கியமாக உடல் பருமன் பிரச்னை உள்ளவர்கள் இதனை உணவில் சேர்த்து வந்தால் இது உடல் எடையை குறைக்க உதவும். இதனை உணவில் சேர்த்துக்கொள்ளும் போது, இதில் உள்ள ஆண்டி ஆக்சிடென்ட் மார்பக புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.