பெண்களே! பிரசவத்திற்கு பின் முடி உதிர என்ன காரணம் தெரியுமா? இதை எப்படி தடுப்பது?

பெண்கள் அதிகமாக தங்களது முடி வளர்ச்சியில் கவனம் செலுத்துவதுண்டு.  பிரசவத்திற்கு பின் அதிகமான முடி உதிர்வு ஏற்பட என்ன காரணம் என்பதையும், அதனை தடுக்க நம் என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.  

பெண்களை பொறுத்தவரையில், தங்களது இளம் வயதில், தங்களது தலை முடி மற்றும் சருமத்தில் அதிகப்படியான கவனம் செலுத்துவதுண்டு. திருமணத்திற்கு பின்பும், ஒரு குழந்தை பெற்றெடுக்கும் வரையிலும் தங்களை பராமரிப்பது உண்டு. ஆனால், ஒரு குழந்தை பெற்ற பின், அவர்களுக்கு வீட்டு வேலைகளை பார்ப்பதிலேயே அவர்களது நேரம் கழிந்து விடுகிறது.

முடி உதிர்வுக்கு காரணம்

பொதுவாக பெண்களை பொறுத்தவரையில், கர்ப்ப காலத்தின் போது, அவர்களுக்கு ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகமாக இருப்பதால், அவர்களின் கூந்தல் அடர்த்தியாகவும், நீளமாகவும், ஆரோக்கியமாகவும் காணப்படுகிறது. பிரசவத்திற்கு பின் இந்த ஈஸ்ட்ரோஜன் சத்துக்கள் குறைந்து விடுகிறது. அதுமட்டுமில்லாமல், நாம் பல வேலைகளுக்கும் சிக்கி கொள்வதால், நாம்மை நாமே கவனித்துக் கொள்ள இயலாத நிலை ஏற்படுகிறது.

இதன்காரணமாக அதிகப்படியாக முடி உதிர்வு ஏற்படுகிறது. ஆனால், குழந்தை பெற்று சில மாதங்களில் முடி உதிர்வு ஏற்படும் போது, குழந்தை முகம் பார்ப்பதால், முடி உதிர்வு ஏற்படுவதாக கூறுவதுண்டு. ஆனால் இது தவறு. இதற்கு காரணமே நமது உடலில் முடி வளர்ச்சிக்கு தேவதையான சத்துக்கள் குறைவது தான்.

இதை தடுக்க என்ன செய்யாலாம்?

நமது மயிர்க்கால்களில் வலிமை இல்லாது இருப்பது தான் அதிகப்படியான முடி உதிர்வுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இதனை தடுக்க வைட்டமின் சத்துக்கள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்க்கறிகளை சாப்பிட வேண்டும். பிரசவத்திற்கு முன் வைட்டமின் மாத்திரைகளை பயன்படுத்துவது போல, பிரசவத்துக்கு பின்னரும் வைட்டமின் மாத்திரைகள் உபயோகித்து வந்தால், முடி உதிர்வதை தடுக்கலாம்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.