பெண்களே..! இந்த நாட்களில் இவையெல்லாம் கடைபிடிக்கிறீர்களா…?

மாதவிலக்கு காலங்களில் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள். 

பெண்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு மாதவிலக்கு ஏற்படும் நாட்களை மிகவும் கடினமான ஒரு நாளாக தான் உணர்வது உண்டு. ஏனென்றால் அந்த நாட்களில் அவர்கள் அதிகப்படியான வலியை தாங்க வேண்டியிருக்கும். வீட்டு வேலை, குடும்ப பொறுப்பு என வலிகளையும் தாங்கிக்கொண்டு குடும்ப பொறுப்பாக செயல்படுவதுதான் பெண். ஆனால் இந்த பெண் தனது உடல் நலத்தை பார்க்காமல் குடும்பத்திற்கு என்றும், மற்றவர்களுக்கு என்றும், தனது வலியையும் தாங்கிக் கொண்டு சென்றால், அவர்களது உடல் ஆரோக்கியம் மேலும் பாதிக்கப்படும்.

பெண்களுக்கு 40 வயதிற்குப் பின் மாதவிலக்கு தொடர்பான பிரச்சினைகள் அதிகமாக ஏற்படும். இவற்றை தடுக்க நாம் என்ன செய்யலாம் என்பது பற்றி பார்ப்போம். இந்த காலகட்டத்தில் பெண்கள் கடும் வேலை செய்வதோ அல்லது குதித்து விளையாடுவதோ தவறு. அவ்வாறு செய்யும் பட்சத்தில் கருப்பையானது தளர்ந்து கீழே இறங்குவதற்கு வாய்ப்புள்ளது. மேலும் கர்ப்பப்பையின் மடிப்புகளில் ரத்த உரைத்தல், மேலும் இதன்மூலம் கர்ப்பப்பையில் கட்டிகள், வீக்கம் போன்றவை ஏற்படலாம். எனவே பெண்களின் பிறப்புறுப்புக்கு அந்த நேரங்களில் ஓய்வு கொடுக்க வேண்டும். இதனால் தான் மாதவிலக்கு நேரத்தில் பெண்கள் ஒய்வு எடுக்க வேண்டும் என கூறப்படுகிறது.

பெண்கள் மாதவிலக்கு நேரத்தில் மற்ற நேரங்களில் இருப்பதைவிட மிகவும் தூய்மையாக இருக்க வேண்டும், ஏனென்றால் தூங்கும் போதோ அல்லது அமர்ந்திருக்கும் போது ரத்த போக்கின் மணத்தை பூச்சிகள் அறிந்து பூச்சிகள் மூலம் நமக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. எனவே மற்ற நேரங்களை விட இந்த காலகட்டத்தில் மிகவும் தூய்மையாக இருப்பது நல்லது.

மாதவிலக்கு நாட்களில் பெண்கள் தாம்பத்திய உறவு, பகல் தூக்கம், வாசனை திரவியங்களை உபயோகித்தல், நகங்களை வெட்டுதல், குதித்தல், ஓடுதல் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. இந்த நாட்களில் குளிர்ந்த நீரால் தலைக்கு குளிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், ரத்தப்போக்கு நின்றுவிடும் வாய்ப்புள்ளதால் மாதவிலக்குக்கு பின் நான்காம் நாளில் இளம் சூடான நீரில் தலைக்கு குளிப்பது மிகவும் நல்லது.

மாதவிலக்கு நாட்களில் பெண்கள் பொதுவாக உணவை தவிர்ப்பது உண்டு. ஆனால் அது நாளடைவில் மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளுக்கு வழிவகுக்கும். எனவே இந்த நாட்களில் பெண்கள் கொழுப்பு, புரதம் தேவையான அளவு கிடைக்குமாறு உணவுகளை உட்கொள்ள வேண்டும். கீரை வகைகளை உட்கொள்ளுதல் நல்லது. இந்த நாட்களில் பெண்கள் பயணம் செய்தல், படிகளில் ஏறி இறங்குதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.