32.2 C
Chennai
Saturday, June 19, 2021

ஆக்ஸிஜன் பற்றாக்குறை.? கொரோனா வார்டில் 5 பேர் உயிரிழப்பு..!


5
/ 100


மத்திய பிரதேசத்தில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட ஐந்து பேர் இன்று உயிரிழந்தனர்.

கொரோனா வைரஸின் 2-வது அலை காரணமாக கொரோனா பாதிப்பு வேகமாக வருகிறது. பல மாநிலங்களில் தடுப்பூசி ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக தேவையான ஆக்ஸிஜனை வழங்க மத்திய அரசுக்கு மாநில அரசுகள் கோரிக்கை வைத்துள்ளன.

இந்நிலையில், மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் உள்ள கேலக்ஸி மருத்துவமனையின் கொரோனா  வார்டில் அனுமதிக்கப்பட்ட ஐந்து பேர் இன்று உயிரிழந்தனர். இறந்த நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இந்த உயிரிழப்பு  ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. அதே நேரத்தில் மருத்துவமனை நிர்வாகம் இந்த குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை பதிலளிக்கவில்லை. ஏற்கனவே டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கடந்த 24 மணி நேரத்தில் சிகிக்சை பெற்றுவந்த 25 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

Related news