26 C
Chennai
Saturday, December 5, 2020

அமித் ஷாவுடன் 3 மணி நேரத்திற்கு மேலாக குருமூர்த்தி ஆலோசனை ! ரஜினி அரசியல் குறித்து ஆலோசனையா ?

உள்துறை அமைச்சர் அமித் ஷாவை துக்ளக் பத்திரிகை ஆசிரியர் குருமூர்த்தி நேற்று இரவு சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையில், ரஜினியின் அரசியல் நிலைப்பாடு குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அமித் ஷா – குருமூர்த்தி சந்திப்பு : 

பாஜகவின் மூத்த தலைவராகவும் ,மத்திய அமைச்சராகவும் உள்ள அமித் ஷா நேற்று தமிழகத்திற்கு வருகை தந்தார்.நேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு தான் தங்கியிருந்த நட்சத்திர ஓட்டலுக்கு சென்றார்.அந்த சமயத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை துக்ளக் பத்திரிகை ஆசிரியர் குருமூர்த்தி நேற்று இரவு சந்தித்து 3 மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடத்தினார்.ரஜினியின் அரசியல் நிலைப்பாடு குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் குறித்து கூறிவந்த நிலையில் துக்ளக் பத்திரிகை ஆசிரியர் குருமூர்த்தி அண்மையில் சந்தித்துள்ளார்.

ரஜினியை  குருமூர்த்தி சந்தித்தது ஏன் ?

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினியுடன் துக்ளக் பத்திரிகை ஆசிரியர் குருமூர்த்தி ஆலோசனை கடந்த நவம்பர் 1-ஆம் தேதி சுமார் 2 மணி நேரமாக ஆலோசனை மேற்கொண்டார். ரஜினியின் உடல்நலம், அரசியல் சூழல், அரசியல் செயல்திட்டம் குறித்து ஆலோசித்ததாக தகவல் வெளியாகியது.இந்த ஆலோசனையில் அரசியல் கட்சி தொடங்குவதில்  தயக்கம் காட்ட வேண்டாம் என்றும், அரசியலுக்கு வாருங்கள் என்றும் குருமூர்த்தி  கூறியதாக தகவல்கள் வெளியாகியது.

அண்மையில் ரஜினி கூறியது என்ன ?

கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை பதிவிட்டார்.அதில்,என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் தீவிரமாகப் பரவிக்கொண்டு வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப்பற்றி தகுந்த நேரத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து, எனது அரசியல் நிலைப்பாட்டை பற்றி மக்களுக்கு தெரிவிப்பேன் என ரஜினிகாந்த கூறினார்.

அப்படி என்ன அறிக்கைதான் வெளியானது ?

தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிக்கலாம் என்று நினைத்திருந்தேன் ஆனால் அதற்குள் கொரோனா பிரச்னையால் கடந்த பல மாதங்களாகவே யாரையும் சந்திக்க முடியவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் பெயரில் அறிக்கை ஒன்று வெளியானது.மேலும் அரசியலில் ஈடுபடுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுரை கூறியதாகவும் அந்த அறிக்கையில் தகவல் இருந்தது. ஆகவே கடந்த சில தினங்களாக ரஜினிகாந்த் அரசியல் நிலைப்பாடு குறித்து, முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளதாக செய்திகள் வெளியாகி வந்தது.இதன் பின்னர் தான் ரஜினி தனது எனது அரசியல் நிலைப்பாட்டை பற்றி மக்களுக்கு தெரிவிப்பேன் என கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

மக்கள் நீதி மய்யம் கட்சியில் ‘மய்யம் மாதர் படை’ – கமல்ஹாசன் அறிவிப்பு.!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான பணிகளை செய்து வருகின்றன. சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டு தமிழக அரசியலில்...

#BREAKING: செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு.. அண்ணா பல்கலை… அறிவிப்பு..!

அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் முடிந்த பிறகே, இதர ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு தொடங்கும்; இதுகுறித்து விரிவான அட்டவணை விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.

குமுறும் கோபம் வேடிக்கை பார்க்க முடியாது.! பாலாஜி,சனமின் செருப்பு விவகாரம் குறித்து கமல்.!

குமுறும் கோபம் வேடிக்கை பார்க்க முடியாது என்று பாலாஜி மற்றும் சனமின் செருப்பு விவகாரம் குறித்து கமல் கூறுகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று கமல்ஹாசன் தோன்றி பிக்பாஸ் போட்டியாளர்களை நோக்கி பல கேள்விகளை முன்...

புயலால் பாதிக்கபட்ட பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள நியமனம்!

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக, தமிழக அரசு பல தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வங்கக்கடலில் உருவான நிவர் மற்றும் புரவி புயல் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து...

Related news