அணிகளை ஆப்கான் அதிரடியாக அச்சுறுத்தும் அனில் கும்பிளே கணிப்பு

அணிகளை எல்லாம் ஆப்கானிஸ்தான்  அச்சுறுத்தும் என்று அணில் கும்ளே கணிப்பு தெரிவித்துள்ளார்.

Related image

உலகக்கோப்பை நெருங்கி வரும் சுழலில் ஒவ்வொரு அணியும் தங்களை வலுப்படுத்தும் நோக்கில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.இந்த சூழலில் ஒருபக்கம் தீவிரம் கொள்ளும் அணிகள் மறுபக்கம் பரிசு தொகைகளை அறிவிக்கும் ஐசிசி என்று பரபரப்பாக உலகக்கோப்பையை நோக்கி  சென்று கொண்டிருக்கும் நிலையில்  பல்வேறு கிரிக்கெட் தரப்புகளிடம் இருந்து கருத்துகள் வந்து கொண்டிருக்கிறது.

Related image

தான் கணித்த கணிப்பு தப்பாகாது  என்ற சொல்லுக்கு சொந்தக்காரர் அணில் கும்ளே ஆம் அவர் கணித்த கணிப்பு என்றும் தப்பானது கிடையாது.அப்படி ஐபிஎல் முதல் பிற ஆட்டங்களையும் சரியாக கணித்து சொல்பவர்.தற்போது உலகக்கோப்பை பற்றி தனது கணிப்பை முன்வைத்துள்ளார்.

அந்த கணிப்பில் ஆப்கானிஸ்தான் அணியை பற்றி தான்.அவர் கூறுகையில் ஆப்கான் அச்சுறுத்தும் அணியாக செயல்படும் என்று தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் உலககோப்பையில் ஆப்கான் சில அணிக்களுக்கு அச்சுறுத்தும் அணியாக செயல்படும் அதன் செயல்பாடுகளை எல்லாம் பார்த்தால் தெரிந்து விடும்.

Related image

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பையில் அந்த அணி 2வது இடத்தை பிடித்தது  குறிப்பிடத்தக்கது.மேலும் ஆப்கான் லீக் சுற்றில் இந்தியாவை போட்டியில் சமன் செய்தது.வங்காளதேச,பாகிஸ்தான் அணிகளை திணற விட்டது.

Related image

மேலும் அந்த அணி வீரர்கள் எல்லாம் உலகம் முழுவதும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடி  வருகின்றனர் இது அந்த அணிக்கு கூடுதல் பலத்தை அளித்துள்ளது.அந்த அணிக்கு இது முன்னேற்றத்தை தந்துள்ளது.ஆப்கான் அணியின் ரஷித்கான் அதிரடி ஆட்டக்கராரக திகழ்கிறார்.அந்த அணியின் ஆல்-ரவுண்டர் ஆக வலம் வரும் முகமது நபி சிறந்த ஆட்டக்காரராக உள்ளார்.மேலும் அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் முஜீப் ரகுமானும் சிறப்பாக செயல்படுகிறார். ஆப்கானுக்கு 250-260 ரன்களை  எதிரணி கொடுத்து விட்டால் பின்னர் ஆப்கானை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம் என்று தெரிவித்துள்ளார்

author avatar
kavitha

Leave a Comment