தஞ்சை பெரிய கோவிலில் 2 மொழிகளில் குடமுழுக்கு -உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தகவல்

  • தொல்லியல் துறையின் முறையான அனுமதி பெறவில்லை எனவே  குடமுழுக்கு  நடத்த தடை விதிக்கவேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
  • இந்த மனு மீதான விசாரணையில், தமிழ், சமஸ்கிருதம் என இரண்டு மொழிகளில் குடமுழுக்கு நடத்தப்படும் என்று அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. 

தஞ்சாவூர் பெரிய கோவிலில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் குடமுழுக்கு தமிழில்  நடத்த வேண்டும் என  ஒரு தரப்பினர் கூறிவருகின்றனர்.ஆனால் ஆண்டாண்டு காலமாக ஆகம விதிகளின் படியே குடமுழுக்கு நடத்த வேண்டும்  என மற்றொரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

நேற்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கறிஞர் சரவணன் என்பவர் முறையிட்டார். அதில் தஞ்சை பெரிய கோயிலில் நடைபெற உள்ள குடமுழுக்கு தொல்லியல் துறையின் அனுமதி பெறாமல்  நடத்த உள்ளனர்.புராதன தொல்லியல் சின்னமாக அறிவிக்கப்பட்ட தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு நடத்த முறையான அனுமதி பெறவில்லை .எனவே குடமுழுக்கு நடத்த தடை விதிக்கவேண்டும் என அந்த முறையீட்டில் கூறியிருந்தார்.பின்னர் நீதிபதி வழக்கறிஞர் சரவணன் கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்தால் இன்று விசாரிப்பதாக கூறினார்.

இதனையடுத்து இன்று வழக்கறிஞர் சரவணன்  தனது கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்ததால் அவர் மனு மீதான விசாரணை நடைபெற்றது. அதில், தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதம் என இரண்டு மொழிகளில் குடமுழுக்கு நடத்தப்படும் என்று அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

இதனையடுத்து குடமுழுக்கு என்ன மொழிகளில் செய்யப்படும் என்பதை நாளை  பிரமாணபத்திரமாக தாக்கல் செய்ய அறநிலையத்துறைக்கு  உத்தரவு பிறப்பித்து வழக்கை நாளை ஒத்திவைத்தது. குடமுழுக்கு தொடர்பாக ஏற்கனவே மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்நாதன், ராமநாதபுரத்தை சேர்ந்த திருமுருகன், பெ.மணியரசன் உள்ளிட்ட பலர் மனுதாக்கல் செய்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

தொடங்கியது மக்களவை தேர்தல் திருவிழா.. 102 தொகுதிகளில் விறுவிறு வாக்குப்பதிவு.! 

Election2024 : 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. நாடு முழுவதும் உள்ள மொத்தம் 543 தொகுதிகளுக்கும் மக்களவை தேர்தல் இன்று (ஏப்ரல்…

17 mins ago

வெற்றியை தொடருமா சிஎஸ்கே ? லக்னோவுடன் இன்று பலப்பரீட்சை !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதுகிறது. நடைபெற்று கொண்டிருக்கும் இந்த ஐபிஎல் தொடரின் 34-வது போட்டியாக இன்று லக்னோ…

33 mins ago

இதுனால தான் இவர் லெஜண்ட்! கடைசி நேரத்தில் ரோஹித் சர்மா செய்த மாயாஜால வேலை!

ஐபிஎல் 2024 : கடைசி ஓவரில் ரோஹித் சர்மா செட் செய்த ஃபீல்டால் தான் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது என்று ரசிகர்கள் அவரை கொண்டாடி…

52 mins ago

பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியும், மும்பை அணியும் மோதியது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக பஞ்சாப்…

8 hours ago

எத்தன தடவ சொல்றது ? அந்த வீரருக்கு அட்வைஸ் கொடுத்த சூர்யகுமார் !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரரான ஜிதேஷ் சர்மாவிற்கு சூரியகுமார் யாதவ் சிறிய அட்வைஸ் ஒன்று கொடுத்திருக்கிறார். பஞ்சாப் கிங்ஸ்…

11 hours ago

எம்மாடியோ! புஷ்பா 2 ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை தெரியுமா?

Pushpa 2 The Rule : புஷ்பா 2 திரைப்படம் ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. தென்னிந்திய சினிமாவில் அடுத்ததாக …

13 hours ago