இந்தியாவில் வெளியானது கேடிஎம் டியுக் 250 அட்வென்சர்.. பி.எம்.டபிள்யூ GS 310-க்கு சிறந்த காம்படிஷனா?

இந்தியாவில் வெளியானது கேடிஎம் டியுக் 250 அட்வென்சர்.. பி.எம்.டபிள்யூ GS 310-க்கு சிறந்த காம்படிஷனா?

இந்தியாவில் கேடிஎம் டியுக் 250 அட்வென்சர் பைக் வெளியான நிலையில், அதன் முழு விபரங்கள் குறித்து காணலாம்.

தற்பொழுதுள்ள காலகட்டத்தில் அனைவரும் பைக்கில் லாங் ரைட் செல்ல தொடங்கியுள்ளனர். இதனால் இளைஞர்கள் உட்பட பலரும், தங்களது கவனத்தை அட்வென்சர் பைக்குகள் மீது செலுத்த தொடங்கியுள்ளனர். இதனால் முன்னணி நிறுவனமான கேடிஎம், பஜாஜ், கவாஸ்கி, பி.எம்.டபிள்யூ, ட்ரையம்ப் உள்ளிட்ட நிறுவனங்கள் சூப்பர்பைக் மட்டுமின்றி, இந்த வகையான அட்வென்சர் பைக்குகளை தயாரிக்க தொடங்கினர்.

டியுக் 250 அட்வென்சர்:

இதன்காரணமாக கேடிஎம் நிறுவனம், தனது கேடிஎம் டியுக் 390 அட்வென்சர்-ஐ வெளியிட்டது. அந்த பைக், அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், அதன் விலை பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதனால் சிறிது மாறுபாடுகளுடன் தனது புதிய கேடிஎம் டியுக் 250 அட்வென்சர் பைக்கை இந்தியாவில் வெளியானது. இந்த கேடிஎம் 390 அட்வென்ச்சர்-ல் 390 அட்வென்ச்சர் பைக்கின் அதே டிசைன் இருக்கின்றது.

அதாவது, கேடிஎம் 390 அட்வென்ச்சர்-ல் உள்ளதுபோல அதே பெரிய பியூல் டேன்க், அகலமான சீட், ஏதுவான ரைடிங் பொசிஷன் இருப்பதால், லாங் ரைட் செல்பவர்களுக்கு இது வரப்ரசாதமாய் அமைந்தது. மேலும் இதில் 14.5 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு பெரிய பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் நாம் நீண்ட தூரம் செல்ல முடியும்.

என்ஜின்:

இதில் கேடிஎம் 250 ட்யூக் பைக்கில் பயன்படுத்தப்படும் அதே என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, அதிகபட்சமாக 29.5 பிஎச்பி பவரையும், 24 NM டார்கை வெளிப்படுத்தும். இதன்மூலம் நல்ல பிக்-அப் இருக்கும். அதனை இயக்க 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், 855 mm இருக்கை உயரம், 200 மிமீ கிரவுண்ட் கிளியரண்ஸ் உள்ளது. இதனால் வேகத்தடைகளில் இந்த பைக்கின் கீழ்பாகம் உரசுவதற்கான வாய்ப்புகள் கம்மி. மேலும், கியர் சிப்டிங்கை ஸ்லிப்பர் மற்றும் அசிஸ்ட் க்ளட்ச் வசதியுடன் வருகிறது.

பிரேக்ஸ்:

இந்த புதிய கேடிஎம் 250 அட்வென்ச்சர்-ல் முன்புறத்தில் 170 மி.மீ. டிராவல் கொண்ட 43 மிமீ ஃபோர்க்குகளும், பின்புறத்தில் 177 மி.மீ டிராவல் கொண்ட மோனோஷாக்ப்சார் உள்ளன. மேலும், 19 அங்குல சக்கரமும், பின்புறத்தில் 17 அங்குல வீல் இருக்கின்றது. பிரேக்கிங் சிஸ்டமை பொறுத்தளவில், முன்சக்கரத்தில் 320 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 230 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளன. இதில் டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இருக்கின்றது. ஆஃப்ரோடு மோடில் வைக்கும்போது பின்புற சக்கரத்தின் ஏபிஎஸ், ஆப் ஆகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

சஸ்பென்ஷன்:

இந்த புதிய கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக்கில் ஆஃப்ரோடு பயன்பாட்டிற்கு ஏற்ற WP APEX என்ற சஸ்பென்ஷன் அமைப்பு உள்ளது. இதனால் நாம் அழுங்கள், குலுங்கள் இல்லாமல் போகலாம். ஆப் ரோடிங்கை பொறுத்தளவில், இந்த பைக் நன்றாக செயல்படுகிறது.

இதர அம்சங்கள்:

இந்த புதிய கேடிஎம் 250 அட்வென்ச்சர்-ல் ஹாலஜன் பல்புகள் கொண்ட ஹெட்லைட் க்ளஸ்ட்டரும், எல்இடி டே டைம் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த பைக்கில் அனைவரும் எதிர்பார்த்த எல்சிடி திரை கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் இதில் புளூடூத் இணைப்பு வசதி இல்லை.

விலை:

இந்த பைக்கானது, ஆரஞ்ச் மற்றும் வெள்ளை நிறங்களிலும், கருப்பு மற்றும் ஆரஞ்ச் வண்ண நிறங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை, 2.48 லட்சம் (ex showroom, Delhi)-க்கு புக்கிங் தொடங்கியுள்ளது. இந்த கேடிஎம் 250 அட்வென்ச்சர்க்கு போட்டியாக பி.எம்.டபிள்யூ GS 310, ராயல் என்பீல்டு ஹிமாலயன் ஆகிய பைக்குகளுக்கு போட்டியாக அமைந்துள்ளது.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *