நீதிமன்றத்தில் ஆஜரான கிருத்திகா… உறவினர்களுடன் செல்ல அனுமதி! – ஐகோர்ட் கிளை உத்தரவு

உறவினர்களுடன் செல்ல குஜராத் பெண் கிருத்திகாவுக்கு அனுமதி வழங்கி உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.

நீதிமன்றத்தில் ஆஜரான கிருத்திகா:

kiruthikacase

தென்காசியில் கடத்தப்பட்டதாக கூறப்படும் குஜராத் பெண் கிருத்திகாவை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜர்படுத்தியது காவல்துறை. கிருத்திகாவை தன்வசம் ஒப்படைக்கக்கோரி தாத்தா ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். தாத்தாவிடம் அனுப்புவது பற்றி கேட்பதற்காக கிருத்திகாவை ஆஜர்படுத்த நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். நீதிபத்திகள் உத்தரவை அடுத்து, கிருத்திகாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது போலீஸ்.

கிருத்திகா வாக்குமூலம்:

k16

பெண்ணின் பெற்றோர் ஜனவரி 26-ஆம் தேதி தென்காசியில் இருந்து வினித்தை தாக்கிவிட்டு கிருத்திகாவை கடத்தி சென்றதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது. தனது மனைவி கிருத்திகாவை மீட்டு தருமாறு வினித் மாரியப்பன் மனு,  கிருத்திகா தாத்தாவும் மனு தாக்கல் செய்துள்ளார். இதனால், கிருத்திகாவை 2 நாட்கள் அரசு காப்பகத்தில் சேர்க்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டிருந்த நிலையில், தன்னை யாரும் கடத்தவில்லை என்றும் விருப்பப்படியே வினித்துடன் சென்றதாகவும் கிருத்திகா வாக்குமூலம் அளித்துள்ளனர.

உறவினர்களுடன் செல்ல அனுமதி:

தற்போது நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார் கிருத்திகா. இந்த நிலையில், தென்காசியில் கடத்தப்பட்டதாக கூறப்பட்டும் குஜராத் பெண் கிருத்திகா, உறவினர்களுடன் செல்ல அனுமதி வழங்கி உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் உள்ள தனது உறவினர் ஹரிஸுடன் செல்வதாக கடிதம் மூலம் நீதிபதிகளிடம் தெரிவித்தார் கிருத்திகா. எழுத்துபூர்வமாக எழுதி தந்ததை அடுத்து உறவினர்களுடன் செல்ல கிருத்திகாவுக்கு ஐகோர்ட் கிளை அனுமதி வழங்கி ஆணையிட்டது.

madurai high court

மேலும், கிருத்திகா படேல் மேஜர் என்பதால் யாருடன் செல்ல வேண்டும் என்பது அவருடைய விருப்பம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக வழக்கு விசாரணைக்கு கிருத்திகா படேல் முறையாக ஆஜராகி முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் யாருடன் செல்கிறாரோ அவரே கிருத்திகா படேலல் பாதுகாப்புக்கு பொறுப்பு ஆவார் எனவும் நீதிபதிகள் திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளனர். கிருத்திகாவை அவரது தாத்தாவுடன் அனுப்ப கூடுது என்று காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment