பச்சை மண்டல அந்தஸ்த்தை இழந்த கிருஷ்ணகிரி.!

கிருஷ்ணகிரி  மாவட்டத்தில் இன்று இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால்

By murugan | Published: May 05, 2020 08:27 PM

கிருஷ்ணகிரி  மாவட்டத்தில் இன்று இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனா பாதிப்பு 2 ஆக உள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 508 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,058 ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை குறிப்பாக சென்னையில் அதிகமாக கொரோனா பரவி வருகிறது. இன்று மட்டுமே அங்கு  279 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து இன்று  கடலூரில் 68 பேருக்கும், செங்கல்பட்டு மற்றும் கள்ளக்குறிச்சியில் தலா 38 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்றுவரை  பச்சை மண்டலமாக இருந்த கிருஷ்ணகிரியில் இன்று இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பச்சை மண்டல அந்தஸ்த்தை கிருஷ்ணகிரி இழந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சார்ந்த ஒருவருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதியானதானது. ஆனால் அவர் சேலம் மாவட்டத்தில் வைத்து தொற்று உறுதியானதால் அது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சேராது என சுகாதாரத்துறை சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Step2: Place in ads Display sections

unicc