வடகொரியாவுக்குப் தென்கொரிய உயர்தலைவர்கள் பயணம்!

தென்கொரிய அதிபர் அலுவலகம் தென்கொரிய உயர் அதிகாரிகள் வடகொரியாவுக்குச் சென்று பேச்சு நடத்த உள்ளதாகத்  அறிவித்துள்ளது. தென்கொரியாவுக்கும் வடகொரியாவுக்கும் பகை நீடித்து வந்த நிலையில் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரிய வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.

போட்டியின் தொடக்க விழாவிலும் நிறைவு விழாவிலும் வடகொரியத் தலைவர் கிம் ஜாங்கின் தங்கை, வடகொரிய நாடாளுமன்றத் தலைவர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அந்தத் தலைவர்களுக்குத் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் தனது மாளிகையில் விருந்தளித்துச் சிறப்பித்தார். இந்நிலையில் இந்த நட்புறவை வளர்க்கும் வகையில் தென்கொரியாவும் உயர் அதிகாரிகளை வடகொரியாவுக்கு அனுப்ப உள்ளதாக அறிவித்துள்ளது.

தேசிய உளவுத்துறைத் தலைவர் சூ ஹூன், தேசியப் பாதுகாப்பு அலுவலகத் தலைவர் சுங் ஐ யாங் ஆகியோர் வடகொரியாவுக்குச் சென்று, இருநாட்டு உறவுகள் குறித்துப் பேச்சு நடத்துவதுடன், அமெரிக்காவுடன் வடகொரியாவைப் பேச்சு நடத்த வலியுறுத்துவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்தக் குழுவினர் வடகொரியப் பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்காவுக்குச் செல்வார்கள் என்றும் அறிவித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment