OTT தளத்திற்காக இணையும் கோலிவுட்டின் முன்னணி இயக்குநர்கள்.!

OTT தளத்திற்காக வெற்றிமாறன், கௌதம் மேனன், விக்னேஷ் சிவன் மற்றும் சுதா கோங்குரா ஆகியோர் இணைந்து வெப் சீரிஸ் ஒன்றை இயக்குவதாகவும், அதில் முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கொரோனா வைரஸ் காரணமாக இந்திய முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதன் மூலம் பல பிரபலங்கள் வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர். சிலர் இயக்குநர்களும், பிரபலங்களும் ஓடிடி தளத்திற்காக குறும்படங்களை இயக்கியும், நடித்தும் வருகின்றனர். இந்த நிலையில் தற்போது ஓடிடி தளமான நெட் ஃபிளிக்ஸ் தளத்திற்காக வெப் சீரிஸ் ஒன்றை தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களான வெற்றிமாறன், கௌதம் மேனன், விக்னேஷ் சிவன் மற்றும் சுதா கோங்குரா ஆகியோர் இணைந்து இயக்கவுள்ளனர்.

ஆவண கொலைகளை மையப்படுத்திய ஒரு ஆந்தலாஜி படமாக உருவாகும் இந்த படத்தில் நடிக்கும் நடிகை, நடிகைகளை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வெற்றிமாறன் இயக்கும் எபிசோடில் பிரகாஷ் ராஜ் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் நடிக்கவுள்ளதாகவும் , சுதா கோங்குரா இயக்கும் எபிசோடில் சாந்தனு, காளிதாஸ் ஜெயராம், பவானி ஸ்ரீ ஆகியோர் நடிக்கவுள்ளதாகவும், நடிகைகள் அஞ்சலி மற்றும் கல்கி ஆகியோர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் எபிசோடில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. பிரபல இயக்குநர்கள் நால்வர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை பார்க்க ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.