கொளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலுக்கு தடை…! பழங்குடியின மக்கள் சாலை மறியல்…!

கொளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலுக்கு தடை விதித்ததால், பழங்குடியின மக்கள் சாலை மறியல்.

கொளத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி பொதுப் பிரிவில் இருந்து பழங்குடி பிரிவினருக்கு இந்த தேர்தலில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில், இருளர் இனத்தை சேர்ந்த மாரியம்மாள் என்ற பெண் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக சென்றுள்ளார்.

அப்போது ஊராட்சி மன்ற தலைவருக்கான தேர்தல் இடஒதுக்கீடு பிரச்சனையால் நிறுத்தப்பட்டுள்ளது என்றும், நீதிமன்றம் இடைக்கால தடை வைத்திருப்பதாகவும் அதிகாரி ஒருவர் கூறினார். இதனையடுத்து, இருளர் சமுதாய மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக ஒன்று திரண்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இந்த பிரச்சனையை சட்டப்படி எதிர்கொள்ளுங்கள் என சமாதானப்படுத்தியுள்ளார். அதனை தொடர்ந்து இருளர் இன மக்கள், ஆட்சியரிடம் மக்கள் தேர்தலை நடத்தி வைக்கக்கோரி மனு அளித்தனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.