Virat Kohli

பிறந்த நாளில் ட்ரீட் வைத்த கோலி.! சச்சினின் உலக சாதனையை சமன் செய்து அசத்தல்.!

By

இந்தியாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் 2023ம் ஆண்டு ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடரில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற 37-வது லீக் ஆட்டத்தில் விராட் கோலி 119 பந்துகளில் 100 ரன்களை எட்டி, தனது 35வது பிறந்தநாளில் 49வது ஒருநாள் சதத்தை பதிவு செய்துள்ளார்.

   
   

கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், பலம் வாய்ந்த இந்தியா மாற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் நேருக்கு நேர் மோதியது. இதில் டாஸ் வென்றதால் இந்திய அணியின் ரோஹித் சர்மா, சுப்மன் கில் ஜோடி முதலில் விளையாட களமிறங்கியது.

ரோஹித் சர்மா பவர் பிளேவில் சிறப்பாக விளையாடி நல்லத்தொடக்கத்தை அமைத்தார். ரோஹித் ஆட்டமிழந்ததையடுத்து நட்சத்திர வீரர் விராட் கோலி களமிறங்கி விளையாடினார். ஷ்ரேயாஸ் ஐயர் 77 ரன்கள் எடுத்தார். இதன்பிறகு களமிறங்கிய வீரர்கள் ஓரளவு நல்ல ரன் எண்ணிக்கையில் களத்தை விட்டு வெளியேறினார்கள்.

ஆனால் விராட் கோலி இறுதிவரை ஜடேஜாவுடன் நின்று விளையாடி, ஒருநாள் போட்டியில் தனது 49வது சதத்தைப் பதிவு செய்தார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளார்.

இந்த சாதனையை தனது 35வது பிறந்தநாளில் கோலி பதிவு செய்துள்ளார். விராட் கோலி தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் 79 சதங்களை அடித்துள்ளார். மேலும், தனது சாதனையை முறியடித்த விராட் கோலிக்கு, சச்சின் டெண்டுல்கர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட சச்சின், “விராட் சிறப்பாக விளையாடினார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் 49ல் இருந்து 50க்கு செல்ல எனக்கு 365 நாட்கள் தேவைப்பட்டது. அடுத்த சில நாட்களில் 49லிருந்து 50க்கு சென்று எனது சாதனையை முறியடிப்பீர்கள் என நம்புகிறேன். வாழ்த்துகள்!” என்று தெரிவித்துள்ளார்.

Dinasuvadu Media @2023