37 C
Chennai
Sunday, June 4, 2023

விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன்… போப் பிரான்சிஸ் இரங்கல்.!

ஒடிசா விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார் புனித...

கணவருடன் சண்டை…4 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்த பெண்.!!

ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் உள்ள 27 வயது பெண்...

மைதானத்தில் கோலி-கம்பிர் வாக்குவாதம்; கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல; ஹர்பஜன் சிங் கருத்து.!

நேற்றை போட்டியில் விராட் கோலி மற்றும் கௌதம் கம்பீருக்கும் இடையே நடந்த வாக்குவாதம் கிரிக்கெட்டிற்கு நல்லதல்ல என ஹர்பஜன் கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பெங்களுரு அணி 126 ரன்கள் எளிய இலக்கை டிபெண்ட் செய்து, லக்னோ அணியை 108 ரன்களுக்குள் ஆல்-அவுட் செய்தது. இதன்மூலம் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் இந்த போட்டியில் விராட் கோலிக்கும், கவுதம் கம்பிருக்கும் இடையே நடந்த வாக்குவாதம் தற்போது பெரும் கலவரமாக வெடித்துள்ளது.

பல்வேறு தரப்பிலும் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே இது சர்ச்சையை உண்டாக்கிய நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இதனை கடுமையாக கண்டித்துள்ளனர். கோலிக்கும், கம்பிருக்கும் இடையே ஏற்கனவே 2013 ஆம் ஆண்டிலும் இது போன்ற சம்பவம் நடந்துள்ளது. மேலும் நடப்பு ஐபிஎல் தொடரிலும், பெங்களூரு அணியை லக்னோ அணி வீழ்த்திய போது, கம்பிர் சின்னசுவாமி மைதானத்தில் ரசிகர்களை பார்த்து அமைதியாக இருக்கும்படியான சைகை செய்தார்.

இதையடுத்து நேற்றைய போட்டியில் விராட் மற்றும் கம்பிருக்கும் இடையே நடந்த வாக்குவாதம் குறித்து பல்வேறு முன்னாள் கிரிக்கெட் வீரர் கும்ப்ளே கூறும்போது, உங்களது உணர்ச்சிகளை மைதானத்தில் நீங்கள் வெளிப்படுத்தக்கூடாது. உங்களுக்கும் எதிரணியுடன் கருத்து வேறுபாடு இருந்தாலும், ஆட்டம் முடிந்துவிட்டால் கைகொடுத்து விட்டு செல்லவேண்டும், உங்களது இந்த செயல் வீரரை மட்டுமல்லாமல் விளையாட்டையும் கெடுப்பது போல் இருக்கிறது, இது பார்ப்பதற்கு நன்றாக இல்லை என்று கூறியுள்ளார்.

கம்பிர் மற்றும் கோலி இருவரும் களத்தில் ஆக்ரோஷமான கிரிக்கெட் வீரர்கள் தான், ஆனால் நேற்றைய சம்பவம் இது விளையாட்டிற்கு பொருத்தமல்ல என்று ராபின் உத்தப்பா குறிப்பிட்டுள்ளார்.

இது 10 ஆண்டுகளாக நடந்து வரும் ஒரு அணையாத சுடர், அது தற்போது மேலும் எரிகிறது, ஆனால் எதுவாக இருந்தாலும் அது நல்லதல்ல என்று முரளி கார்த்திக் கூறியுள்ளார்.

இது தான் விராட் கோலியின் சிறந்த நிலை, அவர் இப்போது சிறந்த பார்மில் இருக்கிறார், எனது வேலை ஆட்டத்தில் அமைதியாக இருப்பது நாங்கள் சிறப்பாக செயல்பட்டு வந்தோம் என கேப்டன் டுபிளெஸ்ஸி தெரிவித்துள்ளார்.

ஹர்பஜன் சிங் கூறும்போது, நான் 2008 இல் ஸ்ரீசாந்திற்கு செய்த செயலுக்கு வருத்தப்படுகிறேன், ஆனால் விராட் ஒரு லெஜண்ட். அவர் இது போன்ற செயலில் ஈடுபடக்கூடாது, இது கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல என்று ஹர்பஜன் கூறியுள்ளார்.