கோலிக்கு ஐபிஎல் நிர்வாகம் அபராதம்! எதற்கு தெரியுமா? எத்தனை இலட்சம் தெரியுமா?

91

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது. நேற்றிரவு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக நடந்த ஐபிஎல் போட்டியின்போது பெங்களூரு அணி தாமதமாக பந்து வீசிது.

அரை மணி நேரம் தாமதமாக பந்துவீசியதன் காரணமாக அந்த அணியின் கேப்டன் விராட் கோலிக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது ஐபிஎல் நிர்வாகம். ஏற்கனவே 7 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூர் அணி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த அபராதம் பெங்களூர் அணிக்கு சோதனை மேல் சோதனையாக அமைந்துள்ளது.