2-வது டெஸ்டில் கோலி சதம் ..! ரஹானே அரைசதம் விளாசல் ..!

இந்தியா , தென்னாப்பிரிக்கா இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று புனேவில் தொடங்கியது.

By murugan | Published: Oct 11, 2019 12:25 PM

இந்தியா , தென்னாப்பிரிக்கா இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று புனேவில் தொடங்கியது. போட்டியில்  டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரரான ரோகித் சர்மா, மயங்க அகர்வால் இருவரும் களமிறங்கினார். ஆட்டம் தொடக்கத்திலேயே ரோஹித் 14 ரன்களில் வெளியேற பின்னர் புஜாரா ,  மயங்க அகர்வால் இருவரும் அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.சிறப்பாக விளையாடி வந்த புஜாரா 58 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் நிதானமாக விளையாடி மயங்க் அகர்வால் சதம் அடித்து 108 ரன்னுடன் வெளியேறினர். இவர்களின் 3 விக்கெட்டுகளையும் தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரபாடா பறித்தார். நேற்று ஆட்ட முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டை இழந்து 273 ரன்கள் எடுத்திருந்தது. களத்தில் கோலி 63 ரஹானே 18 ரன்களுடன் இருந்தனர். இன்று இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியது. நிதானமாக விளையாடிய ரஹானே  அரைசதம் அடித்தார். அடுத்த சிறிது நேரத்திலேயே கேப்டன் கோலி சதம் அடித்தார். கோலிக்கு டெஸ்ட் போட்டியில் இது 26-வது சதம் ஆகும். மேலும் இந்த வருடம் கோலி அடித்த முதல் சதம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்திய அணி 115.2 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 368 ரன்கள் எடுத்து உள்ளது. கோலி 115 , ரஹானே 59 ரன்களுடன் விளையாடி வருகின்றனர்.
Step2: Place in ads Display sections

unicc