கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு:விடுவிக்கப்பட்ட சயன், மனோஜ்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விவகாரத்தில் சயன், மனோஜுக்கு ஜாமின் வழங்கி விடுவித்தது சென்னை எழும்பூர் நீதிமன்றம்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் மற்றும் சயன் ஆகியோர் கூறிய தகவல்கள் தமிழக அரசியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் கோடநாட்டில் கொள்ளை,கொலை அங்கு நடந்த மர்மங்களுக்கு காரணம் தமிழக முதல்வர் தான் தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் கூறிய பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஆனால் இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விவகாரத்தில் சயான் மற்றும் மனோஜ் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.பின் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விவகாரத்தில் சயன், மனோஜுக்கு ஜாமின் வழங்கி விடுவித்தது சென்னை எழும்பூர் நீதிமன்றம்.இருவரும் தனிநபர் உத்தரவாதம் அளித்ததையடுத்து எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

Leave a Comment