கொடநாடு வழக்கு.., உதகை நீதிமன்றத்திற்கு வந்த சயான்..!

கொடநாடு வழக்கு.., உதகை நீதிமன்றத்திற்கு வந்த சயான்..!

கொடநாடு வழக்கில் இன்று நடைபெறும் விசாரணைக்காக, சயான் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு உதகை நீதிமன்றத்திற்கு வந்துள்ளார்.

கொடநாடு கொள்ளை, கொலை சம்பவத்தில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ், கோவையை சேர்ந்த பேக்கரி மேலாளர் சயான், வாலையாறு மனோஜ் உள்ளிட்ட 11 பேர் ஈடுபட்டனர். கொடநாட்டில் கொள்ளையடிக்கும் போது அங்கு இரவு காவலில் ஈடுபட்டிருந்த ஓம்பகதூர் என்ற காவலாளியை கொலை செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக கனகராஜ், வாலையாறு மனோஜ், சயான் உள்ளிட்ட 11 பேர் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில் கனகராஜ் என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்தார். பின்னர், சயான் உள்ளிட்ட 10 பேர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கானது 4 ஆண்டுகளாகவே உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வரும் வருகிறது. இதற்கிடையில், கடந்த 13-ம் தேதி கோத்தகிரி போலிசார் சயானிடம் மீண்டும் மறு விசாரணை செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்தனர். இதை விசாரித்த மாவட்ட நீதிபதி சஞ்சய் பாபா சாயானிடம் விசாரணை நடத்த அனுமதி வழங்கினார்.

இதைத்தொடர்ந்து கடந்த 17ஆம் தேதி மாலை 3.30 மணி முதல் 6.30 மணி வரை  சயான் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்நிலையில், உதகை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணைக்கு இன்று வருகிறது. இந்த வழக்கில் இன்று நடைபெறும் விசாரணைக்காக, வழக்கின் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சயான் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு உதகை நீதிமன்றத்திற்கு வந்துள்ளார்.

author avatar
murugan
Join our channel google news Youtube