கோடநாடு விவகாரம் : முதலமைச்சர் பழனிசாமி, ஸ்டாலின் இருவரும் பேச தடை-சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கோடநாடு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி, ஸ்டாலின் இருவரும்

By venu | Published: Apr 16, 2019 02:52 PM

கோடநாடு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி, ஸ்டாலின் இருவரும் பேச தடை விதித்து  உத்தரவு பிறப்பித்துள்ளது  சென்னை உயர்நீதிமன்றம். முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் மற்றும் சயன் ஆகியோர் கூறிய தகவல்கள் தமிழக அரசியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.கோடநாட்டில் கொள்ளை,கொலை அங்கு நடந்த மர்மங்களுக்கு காரணம் தமிழக முதல்வர் தான் தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் கூறிய பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஆனால் இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் தரப்பில் புகார்  தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கோடநாடு தொடர்பாக எதிர்க்கட்சிகள் முதலமைச்சர் மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறது.குறிப்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசிவருகிறார். அதேபோல் முதலமைச்சரும் அதேபோல் பேசிவருகிறார். Image result for cm mkstalin   இதனால் தேர்தல் பரப்புரையின் போது கோடநாடு விவகாரம் பற்றி திமுக தலைவர் ஸ்டாலின் பேச தடை கோரி தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில் இன்று ஸ்டாலின் மீதான அவதூறு வழக்குக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி அரசு தாக்கல் செய்த மனு முடித்துவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.மேலும் கோடநாடு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி, ஸ்டாலின் இருவரும் பேச தடை விதித்து  உத்தரவு பிறப்பித்துள்ளது.அதேபோல் தடையை மீறி பேசினால் நீதித்துறையில் தலையிடுவதாக கருதப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Step2: Place in ads Display sections

unicc