தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் என்ன நன்மை தெரியுமா.?

தினமும் ஒரு ஆப்பிள் பழம் சாப்பிடுவதால் புற்று நோய் வருவது தடுக்கப்படுகிறது.  சிறிய

By bala | Published: Jun 13, 2020 12:38 PM

தினமும் ஒரு ஆப்பிள் பழம் சாப்பிடுவதால் புற்று நோய் வருவது தடுக்கப்படுகிறது. 

சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய ஒரு பழம் ஆப்பிள், இந்த ஆப்பிள் பழத்தை பிடிக்கா தவர்கள் யாருமே இருக்க முடியாது என்று கூட கூறலாம், இந்த நிலையில் தினமும் சாப்பிட்டால் என்ன நன்மை என்று பார்க்கலாம் வாருங்கள். 

நன்மைகள்:

ஆப்பிள் பழம் சாப்பிடுவதால் உடலில் பல்வேறு நன்மைகள் ஏற்படுகிறது ஆப்பிளில் வைட்டமின் வைட்டமின் மற்றும் நார்ச்சத்து புரதச்சத்து இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது , மேலும் பாஸ்பரஸ் பொட்டாசியம் சத்துக்களும் அதிக அளவில் இருக்கிறது . 

இந்த பழத்தை உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் சாப்பிட்டு வந்தால் உடல் எடையை குறைத்து உடலை கட்டுக்கோப்பாக  வைத்துக்கொள்ளும், மேலும் இதய  நோய் இருப்பவர்கள் தினமும் ஒரு ஆப்பிள் பழம் சாப்பிட்டால் இதய நோய் குணமாகும் என்று கூறப்படுகிறது.

சிலபேருக்கு தூரத்தில் இருந்து ஏதெனும் ஒரு பொருள் பார்க்கும் பொழுது சரியாக கண் தெரியாமல் இருக்கலாம் அப்படி உள்ளவர்கள் தொடர்ந்து ஆப்பிள் பழத்தை சாப்பிட்டு வந்தால் கண் பார்வை நன்றாக இருக்கும் வயதான பிறகு வரும் கண் பிரச்னை நோய்களும் குணமாக்கும் என்று கூறலாம். 

தினமும் ஒரு ஆப்பிள் பழம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலிமையாகும், மேலும் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி மேலும் ஆப்பிள் பழம் சாப்பிடுவதால் புற்று நோய் வராமல் தடுக்கப்படுகிறது, ஆஸ்துமா இருப்பவர்கள் தொடர்ந்து ஆப்பிள் பழம் சாப்பிடுவதால் ஆஸ்துமா கட்டுக்குள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Step2: Place in ads Display sections

unicc