சுவையான இறால் கிரேவி செய்வது எப்படி தெரியுமா.?

சுவையான இறால் கிரேவி செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாருங்கள். 

தேவையான பொருட்கள்:

இறால்
சின்ன வெங்காயம்
தக்காளி
மிளகாய்
வெள்ளை பூண்டு
நல்லெண்ணெய்
வெந்தயம்
மஞ்சள் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், மிளகாய்த்தூள்,
உப்பு
தேங்காய்ப்பால்

முதலில் குடுவையில் நல்லெண்ணெய் ஊற்றி சிறிதளவு வெந்தயத்தை சேர்க்கவும், வெந்தயம் பொரிந்தவுடன் வெட்டி வைத்த சின்ன வெங்காயத்தை சேர்க்கவும் அடுத்ததாக வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு தக்காளி மற்றும் பச்சை மிளகாவை சேர்க்கவும்.

அடுத்ததாக அரைத்து வைத்த வெள்ள பூண்டை சேர்க்கவும், அதற்கு பிறகு கழுவ வைத்த இறால் மீனை சேர்த்து நன்றாக கலக்கிவிடவும், பிறகு தேவையான அளவிற்கு மஞ்சள் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், மிளகாய்த்தூள், சேர்த்துக்கொள்ளவும் இந்த மசாலா அனைத்தும் சேர்த்து நன்றாக வதக்கிவிட்டு 1 டம்ளர் அளவிற்கு தண்ணீர் சேர்த்து 5நிமிடம் மூடி வைக்கவும்.

மேலும் அதற்கு பிறகு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து 1கரண்டி அளவிற்கு கட்டியான தேங்காய்ப்பால் சேர்த்து இரண்டு நிமிடம் அடுப்பில் வைத்து கலக்கவும் 2 நிமிடம் கழித்து சுவையான இறால் கிரேவி ரெடி.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.