ஹிந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ள கத்தி திரைப்படம்! போட்டி போடும் பாலிவுட் பிரபலங்கள்!

ஹிந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ள கத்தி திரைப்படம்! போட்டி போடும் பாலிவுட் பிரபலங்கள்!

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான சர்கார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில், பிகில் படத்தில் நடித்த்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர் விஜயின் துப்பாக்கி திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டதை தொடர்ந்து, இவரது கத்தி திரைப்படமும் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது. இப்படத்தை சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்க உள்ளதாகவும், பாலிவுட் நடிகர் அக்சய் குமார் இப்படத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து, நடிகர் விஜய் நடித்த தெறி படத்தை ரீமேக் செய்ய முன்னணி பாலிவுட் ஹீரோக்கள் போட்டி வரும் நிலையில், தற்போது கத்தி படத்திற்கு போட்டி நிலவி வருகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube