KKRvGT : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ்..!

KKRvGT : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ்..!

GUJARAT TITANS

குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் 180 ரன்கள் எடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது.

16-வது ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறும் நிலையில், 3.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மோதியது.

இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீசப்போவதாக அறிவித்தது. குர்பாஸ் 39 பந்துகளில் 81 ரன்கள்(7 சிக்ஸர், 5 போர்கள்) எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ரிங்கு சிங்(19) மற்றும் ரசல்(34) ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தனர்.

இதனையடுத்து, 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி, 11-வது ஒவரில் மூன்று விக்கெட்களை இழந்து தடுமாறியது.  பின்,  களமிறங்கிய டேவிட் மில்லர் மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் அதிரடியாக  விளையாடினர்.  விஜய் சங்கர் 51 ரன்களை குவித்து, அரைசதம் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனையடுத்து, குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் 180 ரன்கள் எடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube