#Breaking: கிரிஜா வைத்தியநாதன் நியமனம்.., நீதிமன்றம் அதிருப்தி..!

#Breaking: கிரிஜா வைத்தியநாதன் நியமனம்.., நீதிமன்றம் அதிருப்தி..!

கிரிஜா வைத்தியநாதன் நியமனம் தொடர்பாக ஆவணங்களை மத்திய, மாநில அரசுகள் தாக்கல் செய்யாததற்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

தமிழக அரசின் ஓவ்வு பெற்ற தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை  பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணத்துவம் உறுப்பினராக நியமித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த நியமானத்தை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

அந்த மனுவில் 20 ஆண்டுகள் இந்திய ஆட்சிப் பணி அனுபவமும், 5 ஆண்டு சுற்றுச்சூழல் சார்ந்த துறையில் பணியாற்றி அனுபவம் இருக்க வேண்டும். இதை பின்பற்றாமல் சுற்றுச்சூழல் சார்ந்த பணியில் கிரிஜாவுக்கு  மூன்றரை ஆண்டுகள் அனுபவம் உள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை கடந்த முறை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்ட உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தும், வழக்கு குறித்து மத்திய , மாநில அரசு பதிலளிக்க உத்தரவு பிறப்பித்தனர். இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு இன்று வந்தது. அப்போது, நிபுணர்களாக இல்லாத ஐஏஎஸ் அதிகாரிகள் தற்போது நியமிக்கப்பட்டு வருவதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

மேலும், கிரிஜா வைத்தியநாதன் நியமனம் தொடர்பாக ஆவணங்களை மத்திய, மாநில அரசுகள் தாக்கல் செய்யாததற்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தது. கிரிஜா வைத்தியநாதனுக்கு எதிரான வழக்கு விசாரணை நாளை மறுநாளுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

author avatar
murugan
Join our channel google news Youtube