கிரண்பேடியால் தான் புதுவையில் கொரோனா நோயாளிகளுக்கு சுகாதாரத்தை மேம்படுத்த முடியவில்லை -புதுவை அமைச்சர் காட்டம்!

கிரண்பேடியால் தான் புதுவையில் கொரோனா நோயாளிகளுக்கு சுகாதாரத்தை மேம்படுத்த முடியவில்லை -புதுவை அமைச்சர் காட்டம்!

புதுவையில் சுகாதார பணிகளை மேற்கொள்ள கிரண்பேடி தடையாக இருப்பதாக புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் காட்டம்.

புதுச்சேரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா காரணமாகவும் அங்குள்ள கொரோனா அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இல்லை எனவும் அடிக்கடி எழுந்து வரக்கூடிய புகார் தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சருக்கு வந்த நெருக்கடியின் பெயரில் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் அங்கு நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்பொழுது அங்கு உள்ள கழிவறைகள் சுத்தமாக இருக்கிறதா, நோயாளிகளுக்கு வழங்கப்படக் கூடிய உணவு தரமானதாக இருக்கிறதா என்பதை ஆராய்ந்து அவர் நிச்சயம் இன்னும் தரமான உணவுகளை வழங்க அரசு கூடுதல் நடவடிக்கை எடுக்கும் என உறுதியளித்தார்.

மேலும் இன்னும் அதிக சுகாதாரமாக மருத்துவமனையை வைத்திருக்க பணியாளர்கள் நியமிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். இதன் பின்பு வீடியோ பதிவில் பேசிய அவர், புதுச்சேரியில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் வாரத்தில் இரண்டு நாட்களுக்கு ஊரடங்கு அமல் படுத்த அரசுக்கு வலியுறுத்தி இருக்கிறேன். மக்களுக்கு வழங்க வேண்டிய இலவச அரிசியை ஆசிரியர்கள் வழங்க வேண்டும் எனவும், ரேஷன் கடை மூலம் விநியோகிக்க கூடாது எனவும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அவர்கள் தடை செய்கிறார். அரிசி வழங்குவது ஆசிரியர்கள் வேலை இல்லை ரேஷன் கடை மூலம் இலவச அரிசி வழங்கினால்  5 நாட்களில் மக்களுக்கு வழங்கி விடலாம்.

மேலும் கிரண் பேடி தன்னை ஒரு மருத்துவர் போல நினைத்துக் கொண்டு தவறான முடிவு எடுத்து வருகிறார். கொரோனா மருத்துவமனையில் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக கூடுதல் சுகாதார பணியாளர்கள் நியமிப்பதற்கு தடையாக இவர் இருக்கிறார் என்று கூறிய அமைச்சர், கிரண்பேடி ரியல் ஹீரோ அல்ல, முடிந்தால் கொரானா மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்து அங்குள்ள வசதிகளை மேம்படுத்துங்கள். இல்லை என்றால் மூன்று மாதங்களுக்கு முன்பு தூங்கியது போலக் தூங்கிக் கொண்டே இருங்கள் என ஆவேசத்துடன் கூறியுள்ளார் புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்.

author avatar
Rebekal
Join our channel google news Youtube