முதலிடம் பிடித்தும் .. சச்சின்,ரோஹித் சாதனையை முறியடிக்க தவறிய கிங் கோலி ..!

By

நடப்பு உலகக்கோப்பையில் 9 லீக் போட்டிகளில் தென்னாப்பிரிக்கா வீரர் குயின்டன் டி காக் 591 ரன்களை எடுத்து அதிக ரன்கள் எடுத்த வீரர் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். இன்று நடைபெற்று வரும் கடைசி லீக் போட்டியில் இந்தியா -நெதர்லாந்து அணிகள் மோதி வருகிறது. இப்போட்டியில் இந்திய அணியின் அதிரடி வீரர் கிங் கோலி அரைசதம் விளாசி 51 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். இன்றைய போட்டியில் 51 ரன்கள் எடுத்ததன் மூலம் நடப்பு தொடரில் 594 ரன்கள் குவித்துள்ளார்.

   
   

சதம் விளாசிய ஷ்ரேயாஸ், கேஎல் ராகுல் .. நெதர்லாந்திற்கு 411 ரன்கள் இலக்கு..!

இதனால், நடப்பு உலகக்கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த வீரர் பட்டியலில் 591 ரன்களுடன் முதலிடத்தில் இருந்த குயின்டன் டி காக்கை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்தார். கோலி ஐந்து அரைசதங்கள் மற்றும் இரு சதங்களை அடித்துள்ளார். இருப்பினும், இன்னும் 9 ரன்கள் இன்று எடுத்து இருந்தால் உலகக் கோப்பையில் 600 ரன்களைக் கடந்த மூன்றாவது இந்திய வீரர் என்ற சாதனையை கோலி பெற்று இருப்பார். ஆனால் அதை கோலி இன்று தவற விட்டார்.

இருப்பினும் வரும் 15 -ஆம் தேதி நடைபெற உள்ள அரையிறுதியில் இந்த சாதனையை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகக்கோப்பையில் 2019-ல் ரோஹித் சர்மாவும், 2003-ல் சச்சின் டெண்டுல்கரும் 600 ரன்களை கடந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Dinasuvadu Media @2023