இனி கிழிந்த மாடல் மற்றும் டைட்டான ஜீன்ஸ் பேண்ட் அணிவது,ஸ்பைக் ஹேர் ஸ்டைலுக்கு தடை – அரசு அதிரடி உத்தரவு..!

கிழிந்த மாடல் மற்றும் டைட்டான ஜீன்ஸ் பேண்ட் அணிவது, உடல்பாகங்களில் வளையங்கள் அணிவது போன்றவற்றிக்கு தடை விதித்து வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் உத்தரவிட்டுள்ளார்.

வடகொரிய தலைவர் தலைவர் கிம் ஜாங்-உன்,மேற்கத்திய தாக்கங்களைத் தடுக்க வினோதமான சட்டங்கள் அமல்படுத்துவதில் பெயர் பெற்றவர்.அந்த வகையில்,கிம் ஜாங்-உன் சமீபத்தில் கிழிந்த மாடல் மற்றும் டைட்டான ஜீன்ஸ் பேண்ட் அணிவது, உடல்பாகங்களில் வளையங்கள் அணிவது,ஸ்பைக் உள்ளிட்ட ஹேர் ஸ்டைல் வைப்பது போன்றவை  ‘முதலாளித்துவ வாழ்க்கை முறை’ மற்றும் இளைஞர்கள் மீதான மேற்கத்திய தாக்கங்கள் என்று கருதி அவைகளுக்கு ஒரு தடையை விதித்துள்ளார்.

அதன்படி,முதலாளித்துவ கலாச்சாரம் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில்,கலர்கலராக ஹேர் டை பூசிய ஸ்பைக் மற்றும் மல்லட் போன்ற பொது உடைமை கோட்பாடு அற்ற ஹேர் ஸ்டைல்கள் சட்டவிரோதமாக்கப்பட்டுள்ளது.

மேலும்,புதிய சட்டங்களின் ஒரு பகுதியாக,ஆண்களும் பெண்களும் இதற்கு முன்னதாக அங்கீகரிக்கப்பட்ட 215 ஹேர் ஸ்டைல்களில் ஒன்றை மட்டுமே இனி வைக்க வேண்டும்.

இதனைத்தொடர்ந்து,கிழிந்த அல்லது டைட்டான ஜீன்ஸ், டி-ஷர்ட்கள் அணிவதற்கும்,மேலும் மூக்கு மற்றும் உதடுகளில் வளையங்கள் குத்துதல் ஆகியவற்றிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து,நாட்டின் ஆளும் தொழிலாளர் கட்சிக்கான செய்தித்தாளான ரோடோங் சின்முன் சமீபத்தில் கூறியதாவது,”ஒரு நாடு பாதிக்கப்படக்கூடியதாகவும்,அதன் பொருளாதார மற்றும் பாதுகாப்பு சக்தியைப் பொருட்படுத்தாமல் ஈரமான சுவரைப் போல இடிந்து விழும் ஒரு முக்கியமான படிப்பினை வரலாறு நமக்குக் கற்பிக்கிறது.

எனவே,முதலாளித்துவ வாழ்க்கை முறையின் சிறிதளவு அறிகுறியைப் பற்றியும்கூட நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,அவற்றிலிருந்து விடுபட போராட வேண்டும் “,என்று தெரிவித்துள்ளது.

Recent Posts

வெறும் ரூ.9,999 விலையில்…அம்சமான அம்சங்களுடன் ரியல்மி C65 அறிமுகம்.!

Realme C65 5G : பட்ஜெட் விலையில் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில், ரியல்மி (Realme) நிறுவனம் அதன் சி-சீரிஸின் புதிய ஸ்மார்ட் போனான ரியல்மி  C65…

11 mins ago

யெஸ் பேங்க் பயனரா நீங்கள் ? அக்கௌன்ட்ல இனி இந்த பேலன்ஸ் இருந்தே ஆகணும் ..இல்லைனா ..?

Yes Bank : யெஸ் பேங்க்கில் கணக்கு வைத்திருக்கும் பயனர்கள்  தங்களது கணக்கில் எவ்வளவு மினிமம் பேலன்ஸ் வைத்துருக்க வேண்டும் என்று ஒரு சில மாற்றங்களுடன் வெளியிட்டுள்ளனர்.…

53 mins ago

ஏவல் ,பில்லி, சூனியத்திலிருந்து காக்கும் பிரத்தியங்கிரா தேவி ஆலயம் .!

பிரத்தியங்கிரா தேவி- பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தின் சிறப்புகள் மற்றும் அமைந்துள்ள இடம் பெற்று இப்பதிவில் அறியலாம். பிரத்தியங்கிரா தேவி ஆலயம் அமைந்துள்ள இடம்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்…

3 hours ago

தலையில் பேன்டேஜ் உடன் வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.!

Andhra Pradesh Election : ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வேட்புமனுத்தாக்கல் செய்தார். ஆந்திர பிரதேசத்தில் உள்ள 25 மக்களவை…

3 hours ago

தோனியின் ஸ்வாரஸ்யமான விஷயத்தை உடைத்த ருதுராஜ் ..!! யூடூபர் மதன் கௌரியிடம் கூறியது இதுதான் !!

Ruturaj Gaikwad : தமிழக யூடூபரான மதன் கௌரியுடன் நடந்த ஒரு நேர்காணலில் 'தல' தோனியின் ஸ்வாரஸ்யமான ரகசியத்தை பற்றி ருதுராஜ் கெய்க்வாட் பேசி இருந்தார். தமிழக யூடூபரான…

3 hours ago

பீகாரில் பயங்கர தீ விபத்து… 6 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!

Patna: பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பாட்னா ரயில்…

4 hours ago