தெலுங்கில் சிரஞ்சீவி படத்துடன் ரீ என்ட்ரி கொடுக்கிறாரா குஷ்பு.!

மோகன்லால் நடித்து பிளாக் பஸ்டர் ஹிட்டான லூசிபர் படத்தின் தெலுங்கு

By ragi | Published: Jul 01, 2020 07:00 AM

மோகன்லால் நடித்து பிளாக் பஸ்டர் ஹிட்டான லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவியுடன் நடிக்க குஷ்புவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு திரையுலகிலும் 90ஸில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். கோவில் எல்லாம் இவருக்காக ரசிகர்கள் கட்டியுள்ளனர். அந்த அளவுக்கு ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார் குஷ்பு. சமீப காலமாக சினிமாவிலிருந்து விலகி இருந்த இவர் தற்போது ரஜினியின் அண்ணாத்த படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா தொற்று முடிவுக்கு வந்ததும் ஆரம்பிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது குஷ்புவை தெலுங்கிலும் சிரஞ்சீவி படத்தில் நடிக்க கோரி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் மலையாளத்தில் பிளாக் பஸ்டர் ஹிட்டான படங்களில் ஒன்று லூசுபர். இதில் மோகன்லால், மஞ்சு வாரியர், டொவினோ தோமஸ், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். இந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து சிரஞ்சீவி நடிக்கவுள்ளார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் நடித்த கதாபாத்திரத்தில் குஷ்பு அவர்களை நடிக்க கோரி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க சுஹாசினியிடம் பேச்சுவார்த்தை நடந்தது குறிப்பிடத்தக்கது.

Step2: Place in ads Display sections

unicc