29 C
Chennai
Wednesday, June 7, 2023

இன்றைய (7.6.2023) பெட்ரோல், டீசல் விலை..!

382-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமில்லாமல்...

கருப்பு கவுணி கொலஸ்ட்ராலை கட்டுபடுத்துமா…?

கருப்பு கவுனியில் உள்ள  மருத்துவ குணங்கள்.  கருப்பு கவுனி என்பது...

கர்நாடக சபாநாயகராக காதர் போட்டியின்றி தேர்வு!

கர்நாடக மாநிலத்தின் முஸ்லிம் வகுப்பில் இருந்து முதல் சபாநாயகராக தேர்வானார் யுடி காதர்.

கர்நாடக மாநில சட்டப்பேரவை சபாநாயகராக யுடி காதர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி சார்பில் சபாநாயகர் பதவிக்கு நேற்று யுடி காதர் வேட்பு மனு தாக்கல் செய்தார். கர்நாடக மாநில சட்டப்பேரவை சபாநாயகர் பதவிக்கு காதர் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவகுமார் உடன் இருந்தனர்.

இந்த நிலையில் சபாநாயகராக யுடி காதர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். கர்நாடக மாநிலத்தின் முஸ்லிம் வகுப்பில் இருந்து முதல் சபாநாயகராக தேர்வாகியுள்ளார் யுடி காதர். தட்சிண கன்னடா எம்எல்ஏவான காதர் சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை வகித்தவர். 53 வயதான காதர் ஐந்தாவது முறையாக கர்நாடக சட்டமன்ற உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.