, , ,

நீதிமன்ற தடைகளைத் தாண்டியும் தயாராகும் கே.ஜி.எஃப் 2!

By

கன்னட சினிமாவில் பிரம்மாண்டமாக உருவாகி, வெளியான அனைத்து மொழிகளிலும் வரவேற்ப்பை பெற்ற திரைப்படம் கே.ஜி.எஃப். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. கதாநாயகனாக யாஷ் நடிக்கிறார். வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடித்து வருகிறார்.

இப்படத்திற்காக போடப்பட்ட செட்டினால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக கூறி நீதிமன்றத்தில் தடை கேட்டு ஒருவர் வழக்கு போட்டிருந்தார். அதன் காரணமாக அங்கு ஷூட்டிங் நிறுத்தப்பட்டது.

இருந்தாலும் தற்போது படக்குழு அந்த பகுதியை விட்டுவிட்டு, ஹைதராபாத்தில் இன்னோர் இடத்தில செட் போட்டு படமாக்கி வருகின்றனர். நீதிமன்ற வழக்கு முடிந்தவுடன் மீண்டும் பழைய இடத்திற்கு வந்து சூட்டிங் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.