கெத்துனா கெத்துங்கோ என் நண்பன் வர்றான் ஒத்துங்கோ - ஜிவி- யின் ஜெயில் பட செக்கன்ட் சிங்கிள்.!

கெத்துனா கெத்துங்கோ என் நண்பன் வர்றான் ஒத்துங்கோ - ஜிவி- யின் ஜெயில் பட செக்கன்ட் சிங்கிள்.!

  • jail |
  • Edited by ragi |
  • 2020-08-10 19:05:30

ஜி. வி பிரகாஷ் நடித்து இசையமைக்கும் ஜெயில் படத்தின் செக்கன்ட் சிங்கிளான பத்துகாசு வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளார்.

கிரிக்ஸ் சினி கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரிப்பில் வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ஜெயில். இந்த படத்தில் ஜிவி நடித்து இசையமைத்துள்ளார்.மேலும் அபர்னாதி, ராதிகா சரத்குமார், யோகிபாபு, ரோபோ சங்கர், பிரேம்கி அமரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

சமீபத்தில் கூட இந்த படத்திலுள்ள "காத்தோடு காத்தானேன் " என்ற தனுஷ் மற்றும் அதிதி ராவ் ஹைத்ரி பாடியுள்ள பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் தற்போது பிரண்ஷிப் டேய் ஸ்பெஷலாக ஜி. வி. பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் ஜெயில் படத்தின் செக்கன்ட் சிங்கிள் விரைவில் வெளியிடப்படும் என்று கூறி "பத்து காசு இல்லன்னாலும் பணக்காரண்டா, என் செத்து சுகம் எல்லாமே என் நண்பன் தானேடா என்ற வரிகளை தந்த தெருக்குறள் அறிவு அவர்களுக்கு நன்றி என்று பகிர்ந்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது ஜெயில் பட செக்கன்ட் சிங்கிளான" பத்துகாசு " என்ற பாடல் வரும் ஆகஸ்ட் 18ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படவுள்ளதாக அறிவித்து " கெத்துனா கெத்துங்கோ என் நண்பன் வர்றான் ஒத்துங்கோ, சிக்கமா நிக்குரப்போ வந்து கைய குத்தாங்கோ என்ற பிரண்ஷிப் பாடலின் வரிகளையும் குறிப்பிட்டுள்ளார்.