ஆணவக்கொலை செய்த 10 பேருக்கு இரட்டை ஆயுள்! கேரள நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கேரளா மாநிலம் கோட்டயத்தில் வசித்து  வந்துள்ளார் கெவின் ஜோசப். இவர் கல்லூரியில் படிக்கும் போத நீனு என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவிக்கவே, இவர்கள் கடந்த மே மாதம் பதிவு திருமணம் செய்துள்ளனர்.

இந்த திருமணம் பெண் வீட்டாருக்கு பிடிக்கவில்லை என தெரிகிறது. இந்நிலையில் கெவினும், அவரது நண்பர் அனீசும் செல்கையில் இருவரையும் ஒரு கும்பல் கடத்தியுள்ளது. பின்னர், அனீஷை கடுமையாக தாக்கி, காரில் இருந்து கிழே தள்ளியுள்ளனர்.

பின்னர் கெவினை காணவில்லை என கெவின் வீட்டார் போலீசில் புகார் செய்துள்ளனர். பின்னர் தேடுதல் வேட்டையில் இருந்த காவல்த்துறையினர், அவர் கேரளாவில் உள்ள ஆற்றில் சடலமாக மிதப்பதை கண்டறிந்து, சடலத்தை மீட்டனர்.

இந்த கொலை சம்பந்தமாக 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கோட்டயம் நீதிமன்றத்தில் நடைபெற்றது, இதில் பெண்ணின் தந்தையை மட்டும் விடுவித்து,  பெண்ணின் அண்ணன் உட்பட, 10 பேருக்கு வாழ்நாள் முழுக்க சிறையில் இருக்கும் படி, இரட்டை ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டது. மீது 10 பேருக்கும் தலா  40 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அந்த அபராதத்தில் தலா 1. 5 லட்சம் ரூபாய் நீனுவிற்கும், கெவின் அப்பாவிற்க்கும் கொடுக்கப்பட வேண்டும். 1 லட்சம் ரூபாய் கெவின் நண்பர் அனிஷிற்கு வழங்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.